பாக்கித்தான் அரசியலமைப்பு

From Wikipedia, the free encyclopedia

பாக்கித்தான் அரசியலமைப்பு
Remove ads

பாக்கித்தான் இசுலாமியக் குடியரசின் அரசியலமைப்பு (Constitution of the Islamic Republic of Pakistan, உருது:آئین پاکستان), அல்லது 1973 அரசியலமைப்பு பாக்கித்தானின் மீயுயர் சட்டமாகும்.[1] சுல்பிக்கார் அலி பூட்டோவின் அரசினால் எதிர்க்கட்சிகளின் உதவியோடு வடிவமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு நாடாளுமன்றத்தால் ஏப்ரல் 10 அன்று ஏற்கப்பட்டு ஆகத்து 14, 1973 அன்று ஏற்புறுதி செய்யப்பட்டது.[2]

விரைவான உண்மைகள்
விரைவான உண்மைகள்

இந்த அரசியலமைப்பு பாக்கித்தானின் சட்டம், அரசியல் மற்றும் அமைப்பிற்கான வழிகாட்டுதலாக உள்ளது. பாக்கித்தானின் எல்லைகள், மக்கள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள், நாட்டின் அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் ஆணைகள், அரசியல் கட்டமைப்பு, பல்வேறு அரசு அமைப்புகள், படைத்துறையின் கட்டமைப்பு போன்றவற்றை விவரிக்கின்றது.[3] முதல் மூன்று அத்தியாயங்கள் அரசின் மூன்று துறைகளிடையேயான விதிகள், உரிமைகள் மற்றும் தனி அதிகாரங்களை வரையறுக்கின்றது: ஈரவை சட்டவாக்க அவை; பிரதமரை முதன்மைச் செயல் அலுவலராகக் கொண்ட செயலாக்கப் பிரிவு; உச்ச நீதிமன்றத்தின் தலைமையிலமைந்த மீயுயர் கூட்டரசு நீதி முறைமை[3] அரசியலமைப்பு குடியரசுத் தலைவரை நாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் அலங்கார நாட்டுத் தலைவராக வரையறுக்கின்றது.[4] அரசியலமைப்பின் முதல் ஆறு விதிகள் அரசாட்சி முறைமையை விவரிக்கின்றன:கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகவும் இசுலாமை தேசிய சமயமாகவும் குறிக்கின்றது.[5]

1973இல் ஏற்கப்பட்டாலும் 1956இல் முதல் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்ட மார்ச் 23 ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளாக கொண்டாடப்படுகின்றது.[6]

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads