பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ்

From Wikipedia, the free encyclopedia

பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ்
Remove ads

பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bacillus thuringiensis) அல்லது சுருக்கமாக பி.டி. (Bt) என்பது ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர். இது இயற்கையில் பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவற்றின் வயிற்றில் உயிர்வாழ்கின்றது. இது உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது (வணிகப் பெயர்கள்: டைப்பெல் (Dipel), தூரிசைடு (Thuricide)); இந்த நுண்ணுயிரியை 1901 ஆம் ஆண்டு ஷிகெடானே இழ்சிவாட்டா (Shigetane Ishiwata) என்ற நிப்பானிய உயிரியலாளர் கண்டுபிடித்தார். பின்னர் 1911 -இல் எர்ணசுட்டு பெர்லினர் (Ernst Berliner) என்ற செருமானியர் மாவு விட்டில் புழுவில் ஏற்படும் இழ்ச்லாவ்சூக்ட்(Schlaffsucht) என்ற நோயை ஆராயும் போது பி.டி.யைப் பிரித்தெடுத்தார். இந்நுண்ணுயிரிகள் உருவாக்கும் ஒரு வகை படிக அகநச்சுகள் செதிலிறகிகள் எனப்படும் லெப்பிடோப்டீரா (அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்), இருசிறகிகள் எனப்படும் டிப்டீரா (ஈக்கள், கொசுக்கள்), காப்புறை இறகிகள் என்னும் கோலியோப்டீரா (வண்டுகள்), சவ்விறகிகள் எனப்படும் ஹைமெனோப்டீரா (குளவிகள்), தேனீக்கள், எறும்புகள்) ஆகிய உயிரின வகைகளிலுள்ள குறிப்பிட்ட சிலவற்றுக்கு நச்சாக விளங்குகின்றன.[1] இவ்வகை படிக நச்சுக்களின் இருப்பிடமாக பி.டி. உள்ளதால், இதனைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன.

விரைவான உண்மைகள் பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

தீய்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு

பி.டி.யினால் உருவாக்கப்படும் வித்திகளும் உயிரிக்கொல்லி படிகப்புரதங்களும் தீய்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் 1920களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. அது சமயம் அவை நுண்ணுயிர் பொருள்களாகவே இருந்து வந்துள்ளன; பி.டி. நுண்ணுயிர் பொருள்கள் மனிதர்களுக்கு பெரியதொரு விளைவை ஏற்படுத்தாமலே பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன.[2]

பி.டி.யின் பண்புகள்

எவ்வாறு செயல்படுகிறது?

தீய்பூச்சிகள் (குறிப்பிட்ட சில வண்ணத்துப்பூச்சிகள், அந்துப்பூச்சிகள், வண்டுகள் அல்லது கொசுக்களின் இளம்புழுக்கள்) பி.டி. ஏற்றப்பட்ட பயிரை உண்டு பி.டி. அவற்றின் குடலை அடைந்த பின்னர் படிகப்புரதங்களை சுரக்கின்றது; இப்படிக நச்சுகள் தீய்பூச்சியின் செரிமான மண்டலத்தை முடக்குகின்றன. சிலமணி நேரத்தில் புழு உண்பதை நிறுத்தி விடுகின்றது. பட்டினியால் செத்து விழுவதற்கு சில நாள்கள் ஆகலாம். இப்படிகப்புரதத்தை உள்ளடக்கிய பாக்டீரியா இறந்துபோனாலும், அதன் தீய்பூச்சிகளுக்கு எதிரான செயல்பாடு குறைவதில்லை.[3]

குறிப்பிட்ட ஒரு இனத் தீய்பூச்சியை மட்டும் தாக்கும் குணம்

மிகவும் பொதுவாகப் பயன்பாட்டில் இருக்கும் பி.டி. வருக்கமான குருஸ்டாகி வருக்கம் (kurstaki strain) இலை, முள் ஆகியவற்றை உண்ணும் புழுக்களை மட்டும் தாக்கும் குணமுடையது; கடந்த பத்தாண்டில் உருவாக்கப்பட்ட இசுரேலென்சிசு வருக்கம் (israelensis strain) கொசுக்கள், கருப்பு ஈக்கள், காளான் ஈக்கள் ஆகியவற்றின் மீது மட்டும் செயல்படும் தன்மை உடையது. இதில் இலை, முள் புழுக்களைத் தாக்கும் குருஸ்டாகி வருக்கம் கொசுக்களைத் தாக்காது; கொசுக்களைத் தாக்கும் இசுரேலென்சிசு வருக்கம் புழுக்களைத் தாக்காது.[3]

குறைகள்

  • சூரிய ஒளியினால் பி.டி. தரக்கேடு அடைகிறது. சில தயாரிப்புகள் ஒரு வாரம் வரையில் தான் வீரியத்தோடு இருக்கும்; மற்ற சில 24 மணி நேரத்திலேயே வீரியம் இழந்து தரக்கேடு அடையும்.
  • பல தீய்பூச்சிகளால் தாக்கப்படும் பயிர்களில் பி.டி.யின் குறிப்பிட்ட செயல்பாட்டுத் தன்மை ஒரு குறையே;
  • பி.டி.யானது வயிற்றைத் தாக்கும் நச்சு என்பதால், பூச்சி இதனை உட்கொண்டாக வேண்டும். மரப்பட்டையைத் துளைத்துச் செல்லும் புழு, பூச்சிகள் பி.டி.யை உண்ண வாய்ப்பில்லை; எனவே இத்தகைய தீய்பூச்சிகளைக் கட்டுப்படுத்த இத்தொழில்நுட்பம் உதவாது.
  • பி.டி.யை உண்ட பூச்சி உடனே இறப்பதில்லை; எனவே, இது வேலை செய்யவில்லையோ என்ற ஒரு ஐயம் இதைப் பயன்படுத்தும் விவசாயியிடம் ஏற்படும்.[4]

நிறைகள்

  • தீம்பூச்சியைக் கொல்லுமளவிற்கு தேவையான அளவு நச்சை இம்முறையின் மூலம் செலுத்த முடியும்.
  • நச்சு செடியில் மட்டுமே உள்ளடங்கி இருப்பதால், அதை உண்ணும் தீம்பூச்சி மட்டும் இதனால் தாக்கப்படும்; பிற நன்மை-செய்யும் பூச்சிகள் இதனால் பாதிப்படையாது[மேற்கோள் தேவை] என்று கூறப்படுகின்றது, ஆனால் எவை எல்லாம் நன்மை செய்யவல்லன என்று இன்னமும் முழுதும் அறியப்படவில்லை.
Remove ads

முதன்மையான குறைகள்

Thumb
பால்வோர்ம் அந்துப்பூச்சி
Thumb
அதன் முட்டைகள்
  • பருத்தியைத் தாக்கும் பால்வோர்ம்(Bollworm - Helicoverpa zea)என்ற அந்துப்பூச்சியின் புழு பி.டி.க்கு எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டு விட்டது என்ற உண்மை அமெரிக்காவிலுள்ள மிசிசிபி, ஆர்கன்சாசு ஆகிய இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பி.டி. பருத்தி பயிரிடும் அனைத்து இடங்களிலும் இவ்வகை எதிர்ப்புத்தன்மை காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.[5]
Thumb
பருத்திச் செம்புழு
Thumb
அதன் வாழ்க்கைச் சுழற்சி
  • மான்சாண்டோ நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் குஜராத்தின் சில பகுதிகளில் (அம்ரேலி, பாவ்நகர், ஜுனாகட், ராஜ்கோட்) பருத்திச் செம்புழு (pink bollworm) மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டு விட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வகையான ஒப்புதலை இந்நிறுவனம் அளித்துள்ளது உலகிலேயே இதுவே முதல்முறை ஆகும். எதிர்ப்புத்தன்மை வளர்த்துக்கொள்வதை காலந்தாழ்த்த இந்நிறுவனம் கூறும் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும் பி.டி. எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.[6].

பி.டி.சோளம்

கலைச்சொற்கள்

தீய்பூச்சி, தீம்பூச்சி - pest; அந்துப்பூச்சி - moth; நுண்ணுயிரி - microbe; மாவு விட்டில் புழு - flour moth caterpillar; படிக அகநச்சு - crystal endotoxin; மரபணு மாற்றப்பயிர் - genetically modified plant; வித்தி - spore; செரிமான மண்டலம் - digestive system;

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads