பாசுக்கரா (செயற்கைக்கோள்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாசுக்கரா-I ( Bhaskara-I) இந்தியா விண்வெளியில் செலுத்திய இரண்டாவது செயற்கைக் கோளாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய இச்செயற்கைக்கோள் பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு புவி ஆய்வு செயற்கைக்கோளாகும். தொலையளவியல், நீரியல் மற்றும் கடலியல் தொடர்பான தரவுகளை இச்செயற்கைக்கோள் திரட்டியது.

இந்திய வானவியல் ஆராய்ச்சி நிபுணரான பாசுக்கராவின் பெயரை இச்செயற்கைக்கோளிற்கு பெயரிட்டார்கள். 1979 ஆம் ஆண்டு சூன் மாதம் ஏழாம் நாள் 444 கிலோ எடையுள்ளதாக பாசுக்கரா-I தயாரிக்கப்பட்டது. பூமிக்கு 50.7° [2] சாய்வாக 394 கிலோமீட்டர் மற்றும் 399 கிலோமீட்டர் சுற்றுப்பாதை வீச்சில் பூமியின் உயரத்தில் நடுக்கோட்டை மையமாகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கபுசுடின் யார் தளத்தில் இருந்து இத்தொலையுணர்வு செயற்கைக்கோள் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது.
- இச்செயற்கைக்கோளில் இரண்டு புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. கட்புலனாகும் நிறமாலை அலைநீளம் 600 நானோமீட்டரிலிருந்தும் 800 நானோமீட்டரில் அகச்சிவப்புக் கதிருக்கு அருகிலிருந்தும் இவை புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியவையாகும். நீர்வளம், வனவளம் மற்றும் பூமியின் மண்ணியல் தொடர்பான ஆராய்ச்சிகள் இதனால் நிகழ்த்தப்பட்டன.
- இச்செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்ட நுண்ணலை நுண்கதிரளவி 19 மற்றும் 22 சிகா எர்ட்சு அளவுகளில் இருந்து சமுத்திர அமைப்பு, நீராவி மற்றும் காற்றில் உள்ள நீரின் அளவு ஆகியனவற்றை அறிவதற்கான ஆய்வுகளை மேற்கோண்டது. தொடர்ந்து ஒருவருடம் பத்து மாதங்கள் பூமியை வலம் வந்த பாசுக்கரா-I, விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான பல புகைப்படங்களை ஐதராபாத்திலுள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பி வந்தது.
Remove ads
பாசுக்கரா-II
சமுத்திரம் மற்றும் நிலவியல் தொடர்பான ஆய்வுகளுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது பாசுக்கரா-II செயற்கைக்கோளாகும். பூமிக்கு 50.7° சாய்வாக 541 கிலோமீட்டர் மற்றும் 557 கிலோமீட்டர் சுற்றுப்பாதை வீச்சில் பூமியின் உயரத்தில் நடுக்கோட்டை மையமாகக் கொண்டு இச்செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. 2000 புகைப்படங்களுக்கும் அதிகமாக இச்செயற்கைக்கோள் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது[3] .
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads