பாதமி

From Wikipedia, the free encyclopedia

பாதமி
Remove ads

பாதமி (Badami, கன்னடம்: ಬಾದಾಮಿ, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டாட்சியர் பிரிவு ஆகும். முன்னர் வாதாபி என அழைக்கப்பட்ட இவ்விடம் பொ.ஊ. 540க்கும் 757க்கும் இடையில் பாதமிச் சாளுக்கியரின் தலை நகரமாக இருந்தது. இப்பகுதி, பழங்காலக் பாதாமி குடைவரைக் கோவில்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. இது, அகத்தியர் ஏரியைச் சூழ்ந்து அமைந்துள்ள சிவப்பு மணற்கல் பாறைப்பொலிவுகளுக்கு இடைப்பட்ட குறுகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

பொ.ஊ. 6ஆம் நூற்றாண்டுக்கும் 8 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், இன்றைய கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதியை ஆண்ட முற்காலச்சாளுக்கியரின் தலைநகரமாக பாதமி விளங்கியது. இது பொ.ஊ. 540 ஆம் ஆண்டில், சாளுக்கிய மன்னன் முதலாம் புலிகேசியால் நிறுவப்பட்டது. இம்மன்னனின் மக்களான கீர்த்திவர்மன், முதலாம் மங்களேசன் ஆகியோர் இங்குள்ள குடைவரைகளைக் கட்டுவித்தனர். இங்கிருந்து ஆண்ட சாளுக்கிய மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவன் இரண்டாம் புலிகேசி ஆவான். இவன் பல மன்னர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான். எனினும் பல்லவர்களது காஞ்சீபுரத்தை அவனால் கைப்பற்ற முடியவில்லை.

பாதமி குகைக் கோயில்கள் அல்லது குடைவரைகள் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டப்பட்டவை. இங்குள்ள நான்கு இத்தகைய கோயில்கள் சாளுக்கிய மன்னர்களுடைய சமயப் பொறையைக் காட்டும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. முதலாம் குடைவரை சிவனுக்காக எடுக்கப்பட்ட கோயில். இரண்டாம், மூன்றாம் குடைவரைகள் விட்டுணு கோயில்கள். நான்காவது சமண சமயத்துக்கானது. இங்கே சமணத் தீர்த்தங்கரர்களுடைய புடைப்புச் சிற்பங்கள் கணப்படுகின்றன.

ஆழமான பாறைக் குடைவுகளில் செதுக்கபட்ட இந்துக் கடவுளரின் பல்வேறு அவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்கள் இப்பகுதியெங்கும் உள்ளன. கட்டிடக்கலை நோக்கில் பாதமியிலுள்ள கட்டிடங்கள் தென்னிந்தியக் கட்டிடக்கலையின் தொடக்ககாலப் பாணிக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads