பாதின் நகரம்
பாக்கித்தான் நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாதின் ( ஆங்கிம்: Badin ) என்பது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பாடின் மாவட்டத்தின் முக்கிய நகரம் மற்றும் தலைமையிடம் ஆகும். இது சிந்து நதிக்கு கிழக்கே அமைந்துள்ளது . இப்பகுதி சதுப்பு நிலமாகவும், வளமானதாகவும், நெல் வளர்ப்பதற்கு ஏற்றதாகவும் உள்ளது. சில எண்ணெய் வயல்கள் ஊருக்கு அருகில் அமைந்துள்ளன. பாதின் மாவட்டத்தின் முக்கிய நகரம் பாதின். 1998 இல் நகரத்தின் மக்கள் தொகை 61,302 என்ற அளாவில் இருந்தது. சர்க்கரை உற்பத்தியின் காரணமாக பாதின் பெரும்பாலும் 'சர்க்கரை மாவட்டம்' என்று அழைக்கப்படுகிறது.[1]
பாதின் மாவட்டம் 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இதில் ஐந்து தாலுகாக்கள் உள்ளன: பாதின், மாத்லி, சாகீத் பசல் ராகு, தல்கார் மற்றும் தாந்தோ பாகோ மற்றும் 46 வட்டார சபைகள் 14 வருவாய் வட்டங்கள், 111 தபாஸ் மற்றும் 535 டெக்ஸ் ஆகியவை உள்ளன. இந்த மாவட்டம் வடக்கில் ஐதராபாத் & மிர்புகாஸ் மாவட்டத்தின் எல்லையாக உள்ளது. கிழக்கில் தார்பர்கர் & மிர்புர்காஸ், மேற்கில் ஐதராபாத் மற்றும் தட்டா மாவட்டம் மற்றும் தெற்கில் இந்தியாவின் கட்ச் மாவட்டம், இது இந்தியாவுடன் சர்வதேச எல்லையை கொண்டுள்ளது.[2]
Remove ads
காலநிலை
பாதின் வெப்பமான பாலைவன காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பன் காலநிலை வகைப்பாடு ). மார்ச் முதல் அக்டோபர் வரை ஆண்டின் எட்டு மாதங்கள் வீசும் கடல் காற்று காரணமாக மாவட்டத்தின் காலநிலை மிதமானதாக அமைந்துள்ளது, இதனால் இங்கு பாக்கித்தானின் மற்ற பகுதிகளை விட வெப்பம் குறைவாகவும் ஓரளவு குளிராக உள்ளது. மழைக்காலத்தில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது, ஆனால் மிகக் குறைந்த மழைப்பொழிவு உள்ளது. கோடைக்காலம் பொதுவாக ஈரப்பதமாக இருக்கும். பாதினில் குளிர்காலம் நவம்பர் தொடக்கத்தில் இருந்து தொடங்குகிறது, ஈரமான கடல் காற்றிலிருந்து வறண்ட மற்றும் குளிர்ந்த வடகிழக்கு காற்றுக்கு திடீர் மாற்றம் ஏற்படுகிறது, இந்த இயற்கை விளைவு காரணமாக வெப்பநிலையில் உடனடி வீழ்ச்சி ஏற்பட்டு கடலில் சூறாவளிகள் மற்றும் வெள்ள அபாயம் ஏற்படுகிறது.
Remove ads
கல்வி
இந்த பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு கல்விக்கான அணுகலை வழங்க சிந்து பல்கலைக்கழகம் பாதின் நகர பிராந்தியத்தில் 'இலார்' என்று ஒரு வளாகத்தை நிறுவியது. சிந்து பல்கலைக்கழகத்தின் இலார் வளாகம், பாதின் (S.U.L.C) இலார் பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு, அவர்களின் உள்ளூர் பகுதியில் உயர் கல்வியை வழங்குவதற்காக நிறுவப்பட்டது..[3]
இந்த வளாகம் ஒரு நூலகம் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய கணினி ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. கல்லூரியில் வணிக நிர்வாகம், வர்த்தகம் மற்றும் கணினி அறிவியல், கணினி அறிவியலில் முதுகலை பட்டயம் மற்றும் இளங்கலை கல்வியியல், முதுகலை கல்வியியல். & கலையில் முதுகலை (கல்வி ) ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.[3]
Remove ads
கலாச்சாரம்
இந்த நகரம் ஒரு காலத்தில் இப்பகுதியில் சூஃபி கலாச்சாரத்தின் மையமாக இருந்தது. "கியார்வி ஷெரீப் மேளா" அல்லது "கியர்வீ ஷரீஃப் மேளா" (அப்துல் குவாதிர் கிலானியின் திருவிழா) புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாககும். இது சிந்து அரசு தரப்பிலிருந்து ஆதரவு இல்லாததால் 1569 ஆம் ஆண்டில் தொடங்கி 1969 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இஸ்லாமிய மரபுவழி பதிப்பான வஹாபிசத்தின் பரவலாகவும், இது சூஃபிசம் மற்றும் சூஃபி பண்டிகைகளை "இஸ்லாமிய கொள்கைகளுக்கு அச்சுறுத்தல்" என்றும் அரசு பார்க்கிறது. இருப்பினும் ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஈர்த்த திருவிழாவாகும்.[4]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads