2014 காசா போர்

From Wikipedia, the free encyclopedia

2014 காசா போர்map
Remove ads

2014 காசா போர் அல்லது பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை (Operation Protective Edge, எபிரேயம்: מִבְצָע צוּק אֵיתָן; வலிமையான பாறை என்ற அர்த்தம்) என்றும் அறியப்படுவது, 8 சூலை 2014 அன்று இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் காசாக்கரை மீது தொடங்கப்பட்ட படைத்துறை நடவடிக்கையாகும்.[8]

விரைவான உண்மைகள் பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை Operation Protective Edge, நாள் ...

இந்த படைத்துறை நடவடிக்கையின் போது 8 சூலை 2014 அன்று காசா, பெஇட், ஹனென் ஆகிய நகரங்களின் மீது இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் காரணமாக 192 பலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.[9] 1361 பேர் கடுமையான காயங்களுக்கும் உள்ளாகினர்.[10] 17,000 பேர் வரை இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.[11]

காசாவிலுள்ள பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாசுடன் 8 சூலை 2014 அன்று முதல் இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனைக்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இசுரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இந்த யோசனையை நிராகரித்தது.[12]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads