பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம்
அரியானாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம்(Baba Mastnath University-BMU) அரியானாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். இது ரோத்தக் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும் டெல்லி-ரோத்தக் தேசிய நெடுஞ்சாலை 10 இல் உள்ள எம்.டி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.[3]
Remove ads
கல்விப்புலம்
இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், ஆயுர்வேதம் (பிஏஎம்எஸ்), இயன்முறை மருத்துவம், செவிலியர், அறிவியல், மருந்தியல், மானுடவியல், மேலாண்மை மற்றும் வர்த்தகம், சட்டம், இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல், பொறியியல், கல்வியியல், வெகுஜன ஊடகங்கள், கணினி அறிவியல், இந்தி போன்ற துறைகளில் வழங்கப்படுகிறது. பல துறையில் முனைவர் பட்ட ஆய்வுகளும் நடைபெறுகிறது. சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம், சமூகப்பணி, மருத்துவம் மற்றும் மருந்த்துவம் சார்ந்த படிப்புகளும் உள்ளன.[4]
அங்கீகாரம்
பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் தில்லியில் உள்ள பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும்.[5] இது ஹரியானா தனியார் பல்கலைக்கழக சட்டம், 2006இன் கீழ் நிறுவப்பட்டுள்ளது.[6]
Remove ads
துறைகள்/கல்விப்புலம்
- ஆயுர்வேதம்
- இயன்முறை மருத்துவம்
- செவிலியர் கல்வி
- அறிவியல்
- மருந்தியல்
- மானுடவியல்
- மேலாண்மை மற்றும் வர்த்தகம்
- சட்டம்
- கல்வித்துறை
- இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல்
- பொறியியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads