பாபில் மாகாணம்

ஈராக்கின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

பாபில் மாகாணம்map
Remove ads

பாபில் கவர்னரேட் அல்லது பாபிலோன் மாகாணம் (Babil Governorate அல்லது Babylon Province [2] ( அரபி: محافظة بابل ) என்பது நடு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 5,119 சதுர கிலோமீட்டர்கள் (1,976 sq mi), 2018 ஆகும். இந்த மாகாண மக்கள் தொகை 2,065,042 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரமாக கில்லா நகரம் உள்ளது. இது யூப்ரடீஸ் நதிக்கரையில் இருந்த பண்டைய நகரமான பாபிலோனுக்கு (بابل) எதிரே அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பாபில் கவர்னரேட் محافظة بابلபாபிலோன் மாகாணம், நாடு ...
Remove ads

வரலாறு

இன்றைய பாபிலோன் மாகாணத்தில் உள்ள பண்டைய நகரமான பாபிலோன் பண்டைய பாபிலோனியாவின் தலைநகராக இருந்தது. இந்த நகரம் ஈராக்கின் பாக்தாத்திற்கு தெற்கே யூப்ரடீஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[3]

கிமு மூன்றாயிரம் ஆண்டுகளிலிருந்து இந்த நகரம் இருந்துவருகிறது. ஆனால் பாபிலோனின் முதல் வம்சத்தின் மன்னர்களின் கீழ் கி.மு இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில்தான் இது முக்கியம் பெற்றது. இந்த வம்சத்தின் ஆறாவது மன்னரான அம்முராபி (கிமு 1792–1750), பாபிலோனை தன் பேரரசின் தலைநகராக மாற்றினார். இவரது சட்ட விதிகளுக்காக சிறந்த முறையில் இவர் நினைவுகூரப்படுகிறார்.

இரண்டாம் நெபுகாத்நேசர் (கிமு 605–562) மேற்கு ஆசியாவின் பெரும்பகுதிக்கு பாபிலோனியப் பேர்ரசை விரிவுபடுத்தியபோது இந்த நகரம் மேலும் முக்கியத்துவம் பெற்றது.

1991 இல் பாபில் மாகாணம் ஷியா எழுச்சியின் மையமாக இருந்தது. [3]

Remove ads

நிலவியல்

பாபிலோன் மாகாணமானது 32 ° முதல் 33.25 ° வடக்கு அட்சரேகை மற்றும் 44 ° முதல் 45 ° கிழக்கு தீர்க்கரேகைக்கு இடையே அமைந்துள்ளது.

மாவட்டங்கள்

பாபில் மாகாணமானது நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அவை: [3]

  • அல்-மஹாவில் மாவட்டம் ( அல்-மஹாவில் )
  • அல்-முசயாப் மாவட்டம் ( அல்-முசயாப் )
  • ஹாஷிமியா மாவட்டம் ( அல் ஹாஷிமியா )
  • ஹில்லா மாவட்டம் ( ஹில்லா )

மேலும் காண்க

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads