பாபு (நடிகர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாபு (அண். 1963 – 19 செப்டம்பர் 2023) தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவந்த ஒரு இந்திய நடிகர் ஆவார். பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் (1990) திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தார். 1990களில் திரைப்படம் ஒன்றில் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயமடைந்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதவாறு முடங்கினார்.
Remove ads
திரைப்பணி
1990 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் பாபு நடிகராக அறிமுகமானார், புதுமுக நடிகர்களான தென்னவன், ரமா ஆகியோரைக் கொண்ட நடிகர்களுடன் முன்னணிப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துப் பாராட்டுகள் பெற்றார்.[1][2] பின்னர் விக்ரமனின் பெரும்புள்ளி (1991) திரைப்படத்தில் நடிகை சுமனுடன் நடித்தார், பின்னர் தாயம்மா (1991), பொண்ணுக்கு சேதி வந்தாச்சு (1991) ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
1990களின் தொடக்கத்தில் மனசார வாழ்த்துங்களேன் என்ற தனது சொந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சண்டைக் காட்சியில் நடித்ததில், பாபு முதுகுத்தண்டில் காயம் அடைந்து செயலிழந்தார்.[3] அதன் பின்னர் நடிப்பதை நிறுத்தினார்.[4] 1997 இல், ராதா மோகனின் தயாரிப்பில் பிரகாஷ் ராஜ் நடித்து சிமைல் பிளீஸ் என்ற வெளிவராத திரைப்படத்திற்கு உரையாடல்களை எழுதினார்.[5]
சூன் 2004 இல், இயக்குநர் பொன்வண்ணன் தனது நண்பரான பாபுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கப் போவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை பாபுவிற்கு அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், இப்படம் இறுதியில் தயாரிக்கப்படவில்லை.[6]
Remove ads
இறப்பு
பாபு 2023 செப்டம்பர் 19 இல் தனது 60-ஆவது அகவையில் காலமானார்.[7]
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads