பாம்பன் தீவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாம்பன் தீவு (Pamban Island) என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்தியாவைச் சேர்ந்த இத்தீவு தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுற்றுலா மற்றும் இந்துக்களின் புனிதத் தலமாக உள்ள இராமேசுவரம் இத்தீவின் முக்கிய நகரம் ஆகும்.

Remove ads
புவியியல்
பாம்பன் தீவின் அகலம் பாம்பன் நகரப்பகுதியின் மேற்கில் இருந்து தனுஷ்கோடியின் தென்கிழக்கு வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் ஆகும். நீளம் தனுஷ்கோடி முதல் இராமேசுவரம் வரை 2 கி.மீ. முதல் 7 கி.மீ. வரை பரந்துள்ளது.
பாம்பன் தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலூகா ஆகும். இது ஓகரிசல்குளம், மாஹிந்தி, பாம்பன், இராமேசுவரம் என நான்கு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன[1]. இங்கு இரண்டு நிர்வாக கிராமங்கள் உள்ளன. அவை: பாம்பன், இராமேசுவரம் என்பவை. இவை இரண்டும் இத்தீவின் முக்கிய நகரங்கள் ஆகும். இவ்விரு நகரங்களிலும் தொடருந்து நிலையங்களும் உள்ளன. இவற்றைவிட தங்கச்சிமடம், இராமர்படம் (Ramarpadam) என இரண்டு சிறிய குடியேற்றக் கிராமங்களும் உள்ளன. பாம்பன் தீவின் நிர்வாகத் தலைமையகம் இராமேசுவரத்தில் உள்ளது. இராமேசுவரம் பாம்பன் நகரில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும், தனுஷ்கோடியில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads