பாரிஸ் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

பாரிஸ் பல்கலைக்கழகம்map
Remove ads

பாரிஸ் பல்கலைக்கழகம் (பிரெஞ்சு: Université de Paris) பிரான்சுத் தலைநகர் பாரிசில் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் தோற்றுவிக்கப்பட்ட மூத்தப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. 12 ஆம் நூற்றாண்டின் நடுவே நிறுவப்பட்டாலும், 1160 மற்றும் 1250 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறியப்படுகிறது. இடையில் பல மாற்றங்கள் பெற்றும், 1970 ஆம் ஆண்டுவாக்கில் இயங்காமலும், பின்னர் நிறுத்தப்பட்டும், 13 தன்னாட்சி அதிகாரம் கொண்ட பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த பல்கலை சில வேளைகளில் சோர்போன் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம், 1257 ஆம் ஆண்டுவாக்கில் இராபர்ட் தே சோர்போன் என்பவரால் நிறுவப்பட்ட கல்லூரியாகும். தற்போதுள்ள 13 பல்கலைகளில் முதல் நான்கு பல்கலைக்கழகங்கள் அதே கட்டிடத்தில் இயங்கி வந்தன, பிற மூன்றின் பெயர்களிலும் "சோர்போன்" என்ற பெயரும் உள்ளது..

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Thumb
The Sorbonne, பாரிசு, 17ஆம் நூற்றாண்டு engraving

பாரிசிலுள்ள பல்கலைக்கழகங்கள் தற்போது தன்னாட்சியில் இயங்குகின்றன. பாரிசு கழகத்திற்கு மாற்றாக சில க்ரெதெயில் கழகத்தின்கீழும், மற்றும் சில வெர்செய்லசு கழகத்தின் கீழும் இயங்குகின்றன. இந்த 13 பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பொறுப்பை, ஒரே வேந்தரே மேற்பார்வையிட்டு வந்தார். அலுவலகங்கள் சோர்போனில் இருந்தன. 2006ஆம் ஆண்டின் கணக்குப் படி, மௌரிசு கெனெல் என்பவர்தான் வேந்தராக ஆக உள்ளார். இவற்றின் துணை வேந்தராக பியரி கிரிகோரி பணியாற்றுகிறார். இந்த இடத் தொடர்பினாலும், வரலாற்றுத் தொடர்புகளாலும் இவை ஒட்டுமொத்தமாக பாரிஸ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. மற்றபடி, கல்வி வழங்குவதற்கென பாரிஸ் பல்கலைக்கழகம் என்று ஏதுமிருந்தது இல்லை. .

இந்த பல்கலைக்கழகம் கலை, மருத்துவம், சட்டம், இறையியல் ஆகிய நான்கு துறைகளுக்கான ஆசிரியர்களைக் கொண்டிருந்தது. கலைத் துறை குறைந்த மதிப்பில் இருந்தது மட்டுமின்றி அதிக மாணவர்களையும் கொண்டிருந்தது. ஏனென்றால் மேற்படிப்புகளைப் படிக்க கலை பயின்றிருக்க வேண்டும். மாணவர்கள் மொழி அல்லது நாடு வாரியாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். அந்த நான்கு பிரிவுகள்: பிரான்சு, நோர்மாண்டி, பிகர்டி மற்றும் இங்கிலாந்து ஆகியன. நாடுவாரியாக அனுமதிக்கப்படுவதை விட அதிகம் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். ஏனென்றால் இங்கிலாந்து-ஜெர்மனி என்ற நாட்டுப் பிரிவில் ஸ்காண்டினேவியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த மாணவர்களும் சேர்ந்தனர்.

Remove ads

தற்போதைய பல்கலைக்கழகங்கள்

பாரிஸ் பல்கலைக்கழகமத்தின் பதிமூன்று பதிலாள் பல்கலைக்கழகங்கள் தற்பொழுது பிரிந்து இல் ட பிரான்சு பிரதேசத்தில் மூன்று கல்விக்கழகங்களாக உள்ளன.

பதிமூன்று பதிலாள் பல்கலைக்கழகங்கள்

I பந்தியோன்-சோர்போன் பல்கலைக்கழகம் பாரிஸ் கல்விக்கழகம் ஹௌடெஸ் ஈட்யூட்ஸ்-சோர்போன் கலை மற்றும் கைவினைகள்
II பந்தியோன்-அஸ்ஸஸ் பல்கலைக்கழகம் பாரிஸ் கல்விக்கழகம்
III பாரிஸ் III சோர்போன் நுவெல்லே பல்கலைக்கழகம் பாரிஸ் கல்விக்கழகம் சோர்போன் பாரிஸ் நகரம்
IV பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகம் பாரிஸ் கல்விக்கழகம் சோர்போன் பல்கலைக்கழகங்கள்
V பாரிஸ் டெஸ்கார்டிஸ் பல்கலைக்கழகம் பாரிஸ் கல்விக்கழகம் சோர்போன் பாரிஸ் நகரம்
VI பியரே மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம் பாரிஸ் கல்விக்கழகம் சோர்போன் பல்கலைக்கழகங்கள்
VII பாரிஸ் 7 - டெனிஸ் டிடேரொட் பல்கலைக்கழகம் பாரிஸ் கல்விக்கழகம் சோர்போன் பாரிஸ் நகரம்
VIII பாரிஸ் 8 பல்கலைக்கழகம் கிரேடெயில் கல்விக்கழகம் பாரிஸ் விளக்குப் பல்கலைக்கழகம்
IX பாரிஸ் டௌபைன் பல்கலைக்கழகம் பாரிஸ் கல்விக்கழகம் பாரிஸ் அறிவியல் மற்றும் கடிதங்கள் - லத்தீன் காலாண்டு
X பாரிஸ் ஔவெஸ்ட் பல்கலைக்கழகம் வேர்செயில்சு கல்விக்கழகம் பாரிஸ் விளக்குப் பல்கலைக்கழகம்
XI பாரிஸ்-சட் 11 பல்கலைக்கழகம் வேர்செயில்சு கல்விக்கழகம் யூனிவேர்சட் பாரிஸ்
XII பாரிஸ் 12 வல் டெ மார்னே பல்கலைக்கழகம் கிரேடெயில் கல்விக்கழகம் பாரிஸ்-எஸ்ட் பல்கலைக்கழகங்கள்
XIII பாரிஸ் 13 பல்கலைக்கழகம் கிரேடெயில் கல்விக்கழகம் சோர்போன் பாரிஸ் நகரம்

ஏழு பல்கலைக்கழகங்களின் கூட்டணி

இந்த பல்கலைக்கழகங்கள் பெரும்பாலான, கல்லூரி, பல்கலைக்கழக வழிகளில் புதிய குழுக்கள் இணைந்து, அல்லது (2013) அமைக்கும் பணி நடைபெற உள்ளது. சில அமைப்புகளின் ஏனைய வடிவங்களும் தேர்வு பொதுவாக, இந்த குழுக்கள், ஒரு ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி மையம் ( Pôle de recherche மற்றும் டி முகமைகள் சுப்பீரியர், அல்லது பிரெஸ்) சட்ட வடிவம் எடுக்கின்றன. இந்த குழுக்கள் பல்கலைக்கழகங்கள் உயர்நிலைப் பள்ளிகளின் கலப்பு ஆகும்.

மேலதிகத் தகவல்கள் குழுப்படுத்துதல், பல்கலைக்கழகங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads