பார்செலோனா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்செலோனா (அல்லது பார்சிலோனா) (Barcelona; /ˌbɑːrsəˈloʊnə/; எசுப்பானியம்: [baɾθeˈlona]) எசுப்பானியா நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். காட்டலோனியா பகுதியின் தலைநகரம் ஆகும். இந்நகரின் மக்கள் தொகை 2018 கணக்கெடுப்பின் படி 16,20,343 ஆகும்; இது பார்சிலோனா நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்கள்தொகையாகும், அதாவது 101.4 கி.மீ.² பரப்பில் வாழ்வோரின் மக்கள்தொகை. புறநகர்ப் பகுதியில், இது 803 கி.மீ.² வரை விரிகிறது, தோராயமாக 4.5லிருந்து 5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பாரீசு, இலண்டன், ரூர், மிலான் ஆகிய நகர்களுக்கடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக புறநகர் மக்கட்தொகை கொண்ட (ஆறாவது இடத்தில்) நகராகத் திகழ்கிறது. மெடிட்டரேனியன் கடற்கரையில் இருக்கும் பெருநகர்களிலேயே இதுவே மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் யோப்ரிகாட் மற்றும் பீசோசு நதிகளின் முகவாய்ப்பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மேற்கு எல்லையாக செல்லா டி கோல்செரோலா மலைமுகடு (512 மீ/1680 அடி) அமைந்துள்ளது.
ரோமானியப் பேரரசின் நகரமாகத் தோற்றுவிக்கப்பட்ட பார்செலோனா, விரைவில் பார்செலோனா மாவட்டத்தின் தலைநகராக மாறியது. அரகான் அரசாட்சியின் ஆளுகைக்குட்பட்ட பின்னர், அரகான் பேரரசின் மிக முக்கியமான நகரமாக பார்செலோனா உருப்பெற்றது. வரலாற்றில் பலமுறை முற்றுகையிடப்பட்டு சிதைக்கப்பட்ட இந்நகரம், தற்போது செழுமையான பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. இக்காலத்தில், மிக முக்கியமான கலாச்சார நடுவமாகவும் அதிகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகைதரும் இடமாகவும் இந்நகரம் இருக்கிறது. 1992இல் இந்நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. மேலும் பல முக்கியமான உலகத்தரத்திலான மாநாடுகளும் கலந்தாய்வுகளும், முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
Remove ads
வரலாறு
- பார்சிலோனா நகர் குறித்து இரண்டு வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் புராண ஹெர்குலிஸ் இதை நிறுவியதாகவும், மற்றொரு கருத்து கிமு 3 ஆவது நூற்றாண்டில் ஹன்னிபாலின் தந்தையான கார்தீஜினியாவின் ஹமில்கார் நிறுவியதாகவும் தெரியவருகிறது.
- கி.மு 15 ஆம் ஆண்டு ரோமானிய படைப் பிரிவுகள் இந்நகரத்தில் இராணுவ மையத்தை அமைத்தது.
- 343 ஆம் ஆண்டு பசிலிக்கா டி லா என்ற தேவாலயம் இந்நகரத்தில் நிறுவப்பட்டது.
- 5 ஆம் நூற்றாண்டில் விசிகோத்களால் கைப்பற்றப்பட்டப் பின் சில ஆண்டுகளுக்கு இது ஹிஸ்பானியாவின் தலைநகராக இருந்தது
- 8 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதை கைப்பற்றினர்.
- 1137 இல் இரண்டாம் அல்ஃபோன்சா அரியணை ஏறிய பின் இது அரகான் அரசுடன் இணைக்கப்பட்டது.
- 1401 இல் ஐரோப்பாவின் பழமையான பொது வங்கியான பார்சிலோனா வங்கி நிறுவப்பட்டது.
- 1469 இல் அமெரிக்காக் குடியேற்றங்கள் தொடங்கிய போது இதன் வர்த்தக முக்கியத்துவம் குறைந்தது
- 1650-1654 வரையிலான பிளேக் நோய் மூலம் நகரின் மக்கள் தொகை பாதியாக குறைந்தது.
- 26 ஜனவரி 1939 இல் இந்நகரத்தின் வீழ்ச்சிக்கு பின் இதன் மக்கள் பலர் பிரான்சு நாட்டிற்கு குடி பெயர்ந்தனர்.
- 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பார்சிலோனா நகரில் நடைபெற்றபின் புத்துயிர் பெற்றது.
Remove ads
பொருளாதாரம்
பார்சிலோனா உலகின் முன்னணி பொருளாதார ,சுற்றுலா, மற்றும் வர்த்தக நகரமாக திகழ்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்காவது பொருளாதார சக்தியாகவும் உலகில் 35 வது இடத்தயும் வகிக்கின்றது.இதன் மொத்த உற்பத்தி €177 பில்லியன் யூரோ ஆகும். இது வருடத்திற்கு 17% வளர்ச்சிடயுடன் ஐரோப்பாவின் நான்காவது வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது.
போக்குவரத்து
பார்சிலோனா ஐரோப்பாவின் முக்கிய போக்குவரத்து துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது.இது ஐரோப்பியாவில் 9 ஆவது இடத்தில் உள்ளது.இது 7.86 சதுர கி.மீ பரப்பளவுடன் பழைய,வர்த்தக,இலவச துறைமுகம் ஆகிய 3 பிரிவுகளை கொண்டது.
மேலும் 35 மில்லியன் பயணிகளை கையாளும் சர்வதேச விமான நிலையத்தையும் கொண்டது இது இசுபானியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். ஐரோப்பிய பிரான்ஸ் மற்றும் இசுபானியாவை இணைக்கும் உலகின் இரண்டாவது மிக நீளமான அதிவேக ரயில் பாதையின் முக்கிய மையமாக உள்ளது பொதுமக்களின் போக்குவரத்திற்காக 11 மெட்ரோ பாதைகளையும் கொண்டது. மேலும் பொது மக்கள் சாலைகளையும் கொண்டுள்ளது.
உலகப் பாரம்பரியக் களங்கள்
ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனத்தாரால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்கள் (பார்செலோனாவில் இருப்பவை) பின்வருமாறு:[4]
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads