பாலக்காடு சிறீராம்

இந்திய திரைப்பட பாடகர் From Wikipedia, the free encyclopedia

பாலக்காடு சிறீராம்
Remove ads

பாலக்காடு ஸ்ரீராம் (Palakkad Sreeram, பிறப்பு: 16, பிப்ரவரி, 1972) என்பவர் ஓர் இந்திய திரைப்பட பாடகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். படையப்பாவில் வெற்றிக் கொடி கட்டு, ஸ்லம்டாக் மில்லியனரில் லிக்விட் டேன்ஸ்சும் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் பாலக்காடு சிறீராம், பின்னணித் தகவல்கள் ...
Remove ads

குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை

ஸ்ரீராம் 16 பிப்ரவரி 1972 அன்று ஒரு தமிழ் ஐயர் குடும்பத்தில் கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின், ஆலத்தூர் அருகே உள்ள காவச்சேரி கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜெயலட்சுமி, கே. எஸ். லட்சுமி நாராயணன் ஆகியோர் ஆவர். இவர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் இசையில் சாதிக்க சென்னைக்குச் சென்றார்.[2] பாடகரும், இசையமைப்பாளருமான பேபி என்பவரை மணந்தார்.[3] இந்த இணையருக்கு பாரத், அனகா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஸ்ரீராமுக்கு "ஸ்வரர்ணவம்" என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோ உள்ளது.[4]

Remove ads

தொழில்

ஸ்ரீராம் சிறு வயதிலிருந்தே தனது தாயிடமும், சுந்தரேஸ்வர பகவதரிடமும் இசை கற்கத் தொடங்கினார். இவருக்கு இசைக்கருவிகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.[5] தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல திரைப்படப் பாடல்கள் பாடிய [6] ஸ்வரர்ணவம் என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருக்கும் இவர், மலையாள படங்களான மஹமேகா பிரவுகல் மற்றும் மெல்விலாசம் செரியானு ஆகிய இரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். திருமணமான உடனேயே 1995 இல் சென்னை சென்றார். இவர் தானாகவே புல்லாங்குழல் கற்றுக்கொண்டார். 1996 ஆம் ஆண்டில் திரையுலகில் புல்லாங்குழல் கலைஞராக அறிமுகமானார்.[7][8]

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

குறிப்பு

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads