பாலக்காடு மாவட்டம்

கேரளாவின் மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

பாலக்காடு மாவட்டம்
Remove ads

பாலக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும். இங்கு மலையாளம் பரவாலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் மிகுதியாக உள்ளனர் பாலக்காடு மாவட்டத்தின் அதிகார பூர்வ மொழிகள் தமிழ் மற்றும் மலையாளம் ஆகும்

விரைவான உண்மைகள் பாலக்காடு, நாடு ...
Remove ads

பெயர்க்காரணம்

முற்காலத்தில் பாலக்காடு ஆனது பாலக்காட்டுச்சேரி எனவும் வழங்கப்பட்டது. இது வறண்ட நிலம் எனப்பொருள் தரும் பாலநிலம் (பாலை நிலம்) என்பதில் இருந்து வந்திருக்கலாம் என சொற்பிறப்பியல் ஆயவாளர்கள் கருதுகின்றனர். பாலமரங்கள்(Alstonia) நிரம்பிய காடு என்பதால் பாலக்காடு எனப்பட்டது என்னும் கருத்தும் உண்டு.

வரலாறு

பாலக்காடு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இது சென்னை மாநிலத்தின் கீழ் வந்தது. 1956-இல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது பாலக்காடு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்

Thumb
சட்டப் பேரவையின் தொகுதிகள்
Thumb
Thumb
மக்களவை தொகுதிகள்

இந்த மாவட்டத்தை ஆலத்தூர், சிற்றூர், மண்ணார்க்காடு, ஒற்றப்பாலம், பாலக்காடு, பட்டாம்பி, அட்டப்பாடி ஆகிய வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] பாலக்காடு, ஷொர்ணூர், சிற்றூர்-தாத்தமங்கலம், ஒற்றப்பாலம் ஆகியவை நகராட்சிகளாகும். இது கேரள சட்டமன்றத்திற்கான் 12 தொகுகளைக் கொண்டுள்ளது.[2]

மேலதிகத் தகவல்கள் #, சட்டப் பேரவையின் தொகுதிகள் ...

வழிபாட்டுத் தலங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads