பாலாம்பிகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாலாம்பிகா (Balambika, பாலா) இந்துக்கள் வழிபடும் ஒரு பெண் தெய்வம் ஆவார். இவரது கோயில் தமிழ்நாட்டில் உள்ளது. இவருடைய பெயருக்கு "அறிவின் தெய்வம்" அல்லது "குழந்தை தேவி" என்று பொருள்படும். [1]

பாலம்பிகா தசகம் என்னும் புராண நூலில் பாலம்பிகாவைப் பற்றிய விளக்கத்தைக் காணலாம். இவர் நான்கு கைகள் உடையவராகவும் ஒவ்வொரு உள்ளங்கையிலும் சிவப்பு வட்டம் கொண்டவராகவும் ஓவியங்களில் காணப்படுகிறார். [2] இவர் தன்னிரு கைகளில் ஒரு புனித நூலையும் ஒரு ஜபமாலையையும் ஏந்தி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். பாலாம்பிகா ஒரு குழந்தையாகவே கருதப்படுகிறார். இருந்தாலும், ஒரு சிறந்த வாழ்க்கைக்குத் தேவையான உண்மையான அறிவு, கல்வி, ஞானம், ஆற்றல், வளம் ஆகியவற்றைத் தருபவராக வழிபடப்படுகிறார். [3] பாலாம்பிகையை சிலவேளைகளில் குழந்தைகளின் தெய்வம் என்றே அழைக்கின்றனர். எனவே, இவருடைய கோயிலும் குழந்தைகளுக்கு உரித்தானதாகவே கட்டப்பட்டது.

Remove ads

மூலமந்திரம்

“ஐம் க்லீம் சௌ, சௌ க்லீம், ஐம், ஐம், க்லீம், சௌ. " [4]

"ஐம்" என்பது கற்றலைக் குறிக்கிறது.

"க்லீம்" என்பது காந்த ஈர்ப்பைக் குறிக்கிறது.

"சௌ" என்பது செழிப்பைக் குறிக்கிறது.

இந்த எளிய மூன்று சொல் மூலமந்திரம் அனைத்து நவீன உலகப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகக் கருதப்படுகிறது. [3] இந்த மூலமந்திரத்தை உச்சரிக்கும்போது பாலம்பிகா உடனடியாக வந்து அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது. மேலும், "பாலா" என்கிற பெயரை ஓதும்போது, தெய்வமாக இருக்கும் இவர் எப்போதும் கேட்பார் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

Remove ads

கோயில்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் காமராசவள்ளியில் பாலம்பிகாவுக்கு ஒரு கோயில் உள்ளது. இது சுமார் 1000–2000 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது. இக்கோயிலின் சுவர்களில் சிற்பங்கள் காணப்படுகின்றது. மேலும், கார்கோடகன் என்கிற நாகர்களின் அரசன், விநாயகர் மற்றும் நந்தியுடன் சிவ பூசை செய்யும் கதையைக் குறிப்பிடும் சிற்பங்கள் இங்கு உள்ளன. [5] மேலும், 1950-ஆம் ஆண்டில் காஞ்சி மடத்தைச் சேர்ந்த சந்திர சேகர சுவாமிகள் இங்கு வந்து கார்கோடேசுவரருக்கும் பாலாம்பிகைக்கும் நீராட்டி, போற்றி வழிபட்டதாக கோயில் குறிப்பு காணப்படுகிறது.

Remove ads

பரிகாரத்தலம்

பன்னிரெண்டு இராசி சக்கரத்தில் ஒன்றான கடகம் இராசி மற்றும் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் நலம் பெற்று வாழ இங்கு வந்து வழிபடலாம் என்று கூறப்படுகிறது. மேலும், நாக தோஷம் உடையவர்களின் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் உள்ளது. இங்கு வந்து கார்கோடேசுவர் - பாலாம்பிகாவை வழிபாடு செய்வதன் மூலம், திருமணத் தடை நீங்கும் எனவும், குழந்தைப் பேறு மற்றும் நல்ல வாழ்க்கை அமையப்பெறும் எனவும் இக்கோயிலின் தல வரலாறு குறிப்பிடுகிறது.

கொண்டாடப்படும் திருவிழாக்கள்

மேலதிகத் தகவல்கள் விழா, நேரம் ...

பாலாம்பிகா தசகம்

பாலாம்பிகையைப் போற்றிப் பாடும் பாடல்கள் அடங்கிய புனித நூல் பாலம்பிகா தசகம் என்று அழைக்கப்படுகிறது.[6] இந்த உரை பாலாம்பிகையையும் அவரிடம் உள்ளவற்றையும் விவரிக்க "யார்" அல்லது "யாருடையது" ஆகிய சொற்றொடரைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு வரியும் "ஓ பாலாம்பிகா, அருள்கூர்ந்து என்னைக் கண்டு இரங்குவாயாக" என்று தொடங்குகிறது. இந்த நூலில் பாலாம்பிகையைப் பற்றிய வருணனைகளைக் காணலாம். முதலில் இந்த நூல் சமசுகிருதத்தில் எழுதப்பட்டது. பின்னர் பி.ஆர். ராமச்சந்தர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads