பால்ராஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரிகேடியர் பால்ராஜ் (Balraj; 27 நவம்பர் 1965 – 20 மே 2008 இயற்பெயர்: பாலசேகரம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முதுநிலை போர் முனைத் தளபதியாக விளங்கியவர். ஈழப் போர்களின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும், பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.
அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008 ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2008 மே 20 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் மாரடைப்பால் சாவடைந்தார்[1].
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads