பிஆர்சிஏ1
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிஆர்சிஏ1 (BRCA1, /[invalid input: 'icon']ˈbrækə/, பிரெக்கா;[1] மார்பகப் புற்றுநோய் 1, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும்.[2] இத்தகைய மரபணு இருப்பதற்கான முதற்சான்றை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்திலுள்ள மேரி-கிளையர் கிங் ஆய்வகம் 1990இல் வழங்கியது.[3] நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகெங்கும் நிகழ்ந்த தேடல் போட்டியின் விளைவாக[4] 1994இல் உடா பல்கலைக்கழகத்தின் தேசிய சுற்றுசூழல் உடல்நல அறிவியல் கழகமும் (NIEHS) மைரியட் ஜெனடிக்சு என்ற நிறுவனமும் இணைந்து இம்மரபணுப்படியை உருவாக்கின.[5][6]

பிரெக்கா1 மார்பகம் மற்றும் பிறத் திசுக்களில் உள்ள உயிரணுக்களில் காணப்படுகிறது; சிதைந்த டி. என். ஏ.க்களை சீராக்கவும், அவ்வாறு சீராக்க இயலாத உயிரணுக்களை அழிக்கவும் இது துணை புரிகிறது. பிரெக்கா1 மரபணுவே சேதமுற்றால் சிதைந்த டிஎன்ஏக்கள் சரியாக சீராக்கப்படுவதில்லை; இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை கூட்டுகின்றது.[7][8]
பிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது.[5][9] இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது.[10] இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.[11]
Remove ads
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads