கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)

From Wikipedia, the free encyclopedia

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
Remove ads

கலிபோர்னியா பல்கலைக்கழகம் - பெர்க்லி (University of Calfornia, Berkeley), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இங்கு ஒரு தமிழ்த் துறை இருக்கிறது.[4] கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பத்து துணை கழகங்களில் இதுவும் ஒன்று. இங்கு படித்தவர்களும், பணியாற்றியவர்களும் உட்பட 72 பேர் நோபல் பரிசுகளையும், 9 உல்ப் விருதுகளும், 7 பீல்டு பதக்கங்களும், 15 டூரிங் விருதுகளும், 45 மெக்கார்தர் பரிசுகளும், 11 புலிட்சர் விருதுகளும் பெற்றுள்ளனர். இங்குள்ள ஆய்வுக்கூடத்தில் 6 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகளவில் அதிக தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இதுவும் ஒன்று. 1868 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

வரலாறு

தற்போதைய பெர்க்லி வளாகம் அமைந்துள்ள இடம், 1868 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் தனியாரிடம் இருந்து பெறப்பட்டது. பின்னர், அரசு பல்கலைக்கழகத் துறைகளுடன் இணைக்கப்பட்டது. இதற்கு யேல் பல்கலைக்கழகத்துடன் கல்வியளவில் தொடர்புண்டு.

வளாகம்

இந்த வளாகத்தின் பரப்பளவு 1,232 ஏக்கர்கள் இருக்கும். லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகம், லாரன்ஸ் அறிவியல் கழகம், விண்வெளி ஆய்வு மையம், கணிதவியல் ஆய்வுக் கழகம் உள்ளிட்டவை இங்குள்ளன. தாவரவியல் தோட்டமும், ஓய்வு மையமும் இங்குள்ளன. வளாகத்திற்கு வெளியிலும் ஆய்வுக்கூடங்கள் உள்ளன.

கல்வி

இது ஆய்வு மேற்கொள்ளுதலை முதன்மை நோக்கமாகக் கொண்டது. மேற்கத்திய பள்ளி, கல்லூரிகளின் கூட்டமைப்பினால் அங்கிகரிக்கப்பட்டது. இது அரையாண்டு கால அளவுகளில் கல்வி வழங்குகிறது. இங்கு 106 வகை இளநிலைப் படிப்புகளும், 88 முதுநிலைப் படிப்புகளும், 97 ஆய்வுப் படிப்புகளும், 31 துறை சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

  • ஹாஸ் வணிகப் பள்ளி
  • வேதியியல் கல்லூரி
  • பொறியியல் கல்லூரி
  • சுற்றுச்சூழலியல் கல்லூரி
  • அறிவியல் கல்லூர்
  • இயற்கை வளங்கள் கல்லூரி

என துறைக்கான தனித்தனி கட்டிடங்கள் உள்ளன. மின்பொறியியல், கணிப்பொறியியல், அரசியல், சுற்றுச்சூழலியல், பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளை இளநிலையில் அதிகம் பேர் படிக்கின்றனர். வேளாண் அறிவியல், வானியற்பியல், கட்டிடப் பொறியியல், கணிப்பொறியியல், ஆங்கிலம், ஜெர்மன், கணிதம், இயந்திரப் பொறியியல், உயிரிவேதியியல், மரபியல், இயற்பியல், அரசியல் ஆகியன அதிகம் பேரால் கற்கப்படும் முதுநிலைப் பட்டப் படிப்புகள் ஆகும்.

தரவரிசை

பன்னாட்டு தரவரிகளை வெளியிடும் நாளேடுகள், அமெரிக்க அளவில் முன்னணியில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும், உலகளவிலும் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளன.

நிர்வாகம்

இதை நிர்வகிக்கும் பொறுப்பு 26 பேர் கொண்ட குழுவிடம் உள்ளது. இவர்களில் பதினெட்டு பேரை கலிபோர்னிய மாகாண ஆளுநர் நியமிப்பார். 7 முன்னாள் உறுப்பினர்களும், ஒரு மாணவ உறுப்பினரும் இருப்பர். பின்னாளில், பல்கலைக்கழகத்திற்கான தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. பெர்க்லியின் 130க்கும் அதிகமான துறைகளையும், படிப்புகளையும், 14 கல்லூரிகளில் வழங்குகின்றனர். இங்கு மருத்துவத் துறை இல்லை. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் பிரான்சிஸ்கோ வளாகத்தின் கல்வி மையம், இங்கு ஒரு மருத்துவத் துறைப் பள்ளியை தொடங்கியுள்ளது. இங்கு 24,700 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

பண உதவிகளை தனியாரும், அரசு நிறுவனங்களும் வழங்குகின்றன. மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளிக்கப்படுகிறது.

Remove ads

மாணவர்கள்

இங்கு இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான இளநிலை மாணவர்களும், பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதுநிலையும் பயில்கின்றனர். இவர்களில் வேற்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கணிசமான அளவினர் ஆவர். மாணர்களை உள்ளடக்கிய 1700 குழுக்கள் பல உள்ளன. இவை சமூக, அறிவியல், பண்பாடு தொடர்பானவை. தி டெய்லி கலிபோர்னியன் என்ற மாணவர் இதழும், கால்க்ஸ் என்ற வானொலி நிலையமும் குறிப்பிடத்தக்கவை.

நூலகம்

இங்கு 32 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 1.1 கோடி நூல்களும், 70, 000 பாடத் தலைப்புகளும் உள்ளன. அமெரிக்க வரலாற்றைப் பறைசாற்றும் நூல்களும் இங்குள்ளன.

விளையாட்டு

இங்குள்ள மாணவர் குழுவிற்கு கலிபோர்னியா கோல்டன் பியர்ஸ் என்று பெயர். இவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கெடுக்கின்றனர். பேஸ்பால், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், டென்னிஸ், ஓட்டப்பந்தயம், ஜிம்நாஸ்டிக்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளும் அவற்றிற்கான குழுக்களும் உள்ளன.

முன்னாள் மாணவர்கள்

வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (பி.எஸ் 1931, பி.எச்.டி 1933) ரேடியோ ஆக்டிவ் கார்பனின் காலத்தை கண்டுபிடித்தவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads