பிசுமார்க் தீவுக்கூட்டம்

From Wikipedia, the free encyclopedia

பிசுமார்க் தீவுக்கூட்டம்
Remove ads

பிசுமார்க் தீவுக்கூட்டம் (Bismarck Archipelago) பப்புவா நியூ கினியில் உள்ள ஒரு தீவுப் பகுதி ஆகும். இத்தீவுக்கூட்டம் அமைதிப் பெருங்கடலின் மேற்கே, நியூ கினியின் வடகிழக்குக் கரைக்கப்பால் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 50,000 சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.

விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இங்குள்ள தீவுகளுக்கு 33,000 ஆண்டுகளுக்கு முன்னர் நியூ கினியில் இருந்து பழங்குடியினர் பிசுமார்க் கடல் வழியாகவோ அல்லது தற்காலிகமாக உருவாகிய நிலப் பாலம் வழியாகவோ இங்கு வந்து குடியேறியதாக நம்பப்படுகிறது. பின்னர் லப்பித்தா பழங்குடியினர் இங்கு வந்தனர்.

1616 இல் நெதர்லாந்தில் இருந்து வில்லெம் சோர்ட்டன் என்பவர் இங்கு வந்தார்.[1][2] 1884 ஆம் ஆண்டில் செருமனியின் கட்டுப்பாட்டில் வரும் வரை இங்கு ஐரோப்பியரின் வருகை குறைவாகவே இருந்தது. செருமனியின் அரசுத்தலைவர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்கின் நினைவாக இத்தீவுக் கூட்டத்திற்கு பிசுமார்க் எனப் பெயரிடப்பட்டது.

1888 மார்ச் 13 இல் ரிட்லர் தீவில் எரிமலை வெடித்ததை அடுத்து இங்கு பெரும் ஆழிப்பேரலை உருவானது. எரிமலை வெடித்து அதன் குழம்புகள் அனைத்தும் கடலினுள் வீசப்பட்டதனால் சிறிய குழிவு ஏரி ஒன்று உருவானது.[3]

Thumb
அமெரிக்காவின் முதல் படையினரின் வருகை, ஆட்மிரால்ட்டி தீவுகள், 29 பெப்ரவரி 1944

முதல் உலகப் போர் ஆரம்பித்ததை அடுத்து, 1914 ஆம் ஆண்டில் ஆத்திரேலியக் கடற்படையினர் இத்தீவுக்கூடத்தைக் கைப்பற்றினர். உலக நாடுகளின் அமைப்பு ஆத்திரேலியாவை இதன் ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சிறிது காலம் சப்பானின் பிடியில் இருந்த இத்தீவுக் கூட்டத்தை ஆத்திரேலியா மீண்டும் கைப்பற்றியது. 1975 இல் பப்புவா நியூ கினி விடுதலை அடைந்த போது இத்தீவுகளும் அந்நாட்டிடம் கொடுக்கப்பட்டது.

Remove ads

புவியியல்

பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள பெரும்பாலான தீவுகள் உயர் தீவுகள் ஆகும். இவற்றின் மொத்த நிலப்பரப்பு 49,700 சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.

Thumb
பப்புவா நியூ கினியின் மாகாணங்கள்
  • மானுசு மாகாணம் (வரைபடத்தில் இல. 9)
    • ஆட்மிரால்ட்டி தீவுகள் 18 தீவுகளை உள்ளடக்கியது.
      • மானுசுத் தீவு, முக்கிய தீவு
      • லாசு நேகுரோசு தீவு
      • லோவு தூவு
      • இந்துரோவா தீவு
      • தொங் தீவு
      • பாலுவான் தீவு
      • பாக் தீவு
      • பர்டி தீவு
      • இரம்புத்தியோ தீவு
      • செயிண்ட் அன்ட்ரூசு தீவு
    • மேற்குத் தீவுகள்:
      • ஆவுஆ தீவு
      • எர்மித் தீவுகள்
      • கணியெத் தீவுகள்
        • சாயி தீவு
      • நினிகோ தீவுகள்
      • வுவுலு தீவு
  • நியூ அயர்லாந்து மாகாணம் (இல. 12)
    • நியூ அயர்லாந்து தீவு முக்கிய தீவு
    • நியூ அனோவர் தீவு
    • செயிண்ட் மத்தாயசு கூட்டம்
    • தபார் கூட்டம்
    • லிகிர் கூட்டம்
    • தங்கா கூட்டம்
    • பெனி தீவுகள்
    • தியாவுல் தீவு
Thumb
ரபாவுல் எரிமலைவாய், நியூ பிரிட்டன்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads