பிடவம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிடவம் (Randia malabarica) என்னும் மலர் பிடவு என்னும் சொல்லாலும் குறிக்கப்படும்.

பிடவம் மலர் படம். பி.எல்.சாமி போன்ற அறிஞர் கருத்து

பிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று.

பிடவ மலரைப்பற்றிச் சங்கப்பாடல்களில் உள்ள குறிப்புகள் இதன் தன்மையை உண்ணர்த்துகின்றன. கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.

இடம்
  • முல்லை நிலத்தில் பூக்கும். [1]
  • மலைக்காட்டில் பூக்கும். [2]
  • மணல் வெளியிலும் பூக்கும். [3]
  • வழியெங்கும் பூத்துக் குலுங்கும். [4]
பருவம்
  • கார் பருவத்தில் மலரும் [5] [6]
  • வானத்தில் மேக மூட்டத்தில் நனைந்து பூக்கும். [7]
  • மாலையில் மலரும் [8]
  • கூர்நுனி கொண்ட களாக்காய் காய்க்கும்போது பிடவு மலரும் [9]
தோற்றம்
  • இலை இல்லாமல் பூத்துக் குலுங்கும். [10]
  • செடியில் நீண்ட முட்கள் இருக்கும். [11]
  • செடி முடம்பட்ட கால், கை போல இருக்கும். [12]
  • செடி கருமையாகவும் இருக்கும். பூ வெண்மையாக இருக்கும். [13]
  • காம்பு நீளமாக இருக்கும். [14]
  • மொட்டுகள் கூர்மையாக இருக்கும். [15]
  • வெள்ளை வெளேர் எனப் பூத்துக் குலுங்கும். [16]
  • குளுமையும் நறுமணமும் கொண்டது. [17]
  • குலை குலையாகப் பூக்கும். [18]
  • பூவின் முதுகில் சிவந்த கோடுகள் இருக்கும். [19]
பறவை
  • பறவைகள் பிடவப் பூக்குலைக்குள் பதுங்கும். பறவை கடத்திடைப் பிடவின் தொடைக்குலை சேக்கும். [20]
ஊர்
  • பிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. [21]
பூக்கூடை
  • பிடகை என்னும் சொல் பூக்கூடையை உணர்த்தும். [22]
Remove ads

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads