பியாரேலால் கந்தேல்வால்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பியாரேலால் கந்தேல்வால் (Pyarelal Khandelwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1925 ஆம் ஆண்டு 6 ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவில் ஒரு ராசுட்ரிய சுவயம்சேவக் சங்க பிரச்சாரகராகவும், பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார்.
தொழில்
இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1]
1989 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் திக்விச்சய் சிங்கை தோற்கடித்து, ராச்கர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் திரும்பினார். [2]
இறப்பு
2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று மாரடைப்பால் கந்தேல்வால் இறந்தார். 84 வயதான இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். [3] [4]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads