பிரகதி வான்வெளி அருங்காட்சியகம்

இந்தியாவின் னமகாராட்டிர மாநிலத்திலுள்ள வான்வெளி அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

பிரகதி வான்வெளி அருங்காட்சியகம்
Remove ads

பிரகதி வான்வெளி அருங்காட்சியகம் (Pragati Aerospace Museum) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாசிக் நகருக்கு வெளியே அமைந்துள்ளது. இதை இந்துசுத்தான் வான்வழி தொலையளவு பிரகதி அருங்காட்சியகம் என்றும் அழைக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இந்துசுத்தான் வான்வழி தொலையளவு நிறுவனம் அதன் தொழில்நுட்ப சாதனைகளையும் பாராட்டத்தக்கதான அதன் பயணத்தையும் வெளிப்படுத்த இந்த அருங்காட்சியகத்தைத் திறந்தது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Thumb
சு-30எம்.கே.ஐ இந்தியா

இந்துசுத்தான் வான்வழி தொலையளவு நிறுவனம் தயாரிக்கும் வானூர்திகளின் மாதிரிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. கண்காட்சியில் இம்மாதிரிகள் உயர் கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்தன.

Remove ads

அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள்

வான்வெளி அருங்காட்சியகம் இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் வரலாறு, போர் விமானத் தொழில்நுட்பம் உள்ளிட்ட இத்தியாதிகள் விளக்கப் படங்களாக ஓர் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [1]

மற்றொரு அறையில் விமானத்தின் சில மெருகூட்டப்பட்ட கூறுகள் வைக்கப்பட்டுள்ளன, முக்கியமாக சுகோய் சு 30, மிக்-21 மற்றும் மிக்-27. போன்ற வகை விமான்ங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. [2] 1963 முதல் ஒரு மிக் -21 விமானத்தின் ஓட்டுநர் தலைகவசம் உட்பட 1963 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிலிருந்த விமான சீருடைகள் போன்றவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

Thumb
மிக்-21
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads