பிரடெரிக் நோர்த்

From Wikipedia, the free encyclopedia

பிரடெரிக் நோர்த்
Remove ads

சர் பிரடெரிக் நோர்த் (Frederick North, 5th Earl of Guilford, பெப்ரவரி 7, 1766அக்டோபர் 14 1827) ஒரு பிரித்தானிய அரசியவாதி மற்றும் குடியேற்றவாத நிருவாகி. இவர் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை மாறியதன் பின்னர் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி ஆவார். பிரித்தானிய அரசால் அக்டோபர் 12 1798 அன்று இவர் நியமிக்கப்பட்டார்; சூலை 19 1805 வரை பதவி வகித்தார்.

விரைவான உண்மைகள் பிரடெரிக் நோர்த் Frederick North, பிறப்பு ...
Remove ads

முக்கிய சீர்த்திருத்தங்கள்

Thumb
இலங்கை தேசாதிபதியின் கொடி

இவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:

  • நிலவரிகளை வசூலிக்க மாகாண அதிகாரிகளை நியமித்தல்.
  • அமிர்தார்கள் நீக்கப்பட்டு முகாந்திரம்கள் நியமனம் பெற்றமை. (இவர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது)
  • புதிய இலாகாக்கள் அமைக்கப்பட்டன. (உதாரணம்: தபால், கல்வி, சுகாதாரம், நில அளவை போன் இலாக்காக்கள்)
  • கறுவா உற்பத்திப் பகுதிகளுக்குப் பொறுப்பாக ஒரு பிரித்தானிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.
  • கிரிமினல் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றன அமைக்கப்பட்டன.
  • இலங்கையின் சட்டமரபுகளையும், ஒல்லாந்த நீதிமுறைகளையும் உள்ளடக்கிய இலங்கையின் சட்டத்தொகுதியொன்று உருவாக்கப்பட்டது.
  • சுதேச பாடசாலைகள் நிறுவப்பட்டு, ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது.
  • முத்துராஜவெல திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
  • அம்மைப்பால் கட்டும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
  • அரசாங்க வர்த்தமானி அறிமுகப்படுத்தப்பட்டது.
Remove ads

கட்டுக்கோப்பான நிர்வாகம்

இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பிரதேசங்களில் ஒரு கட்டுக்கோப்பான நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் இவரின் பணி அளப்பரியதாகக் கொள்ளப்படுகின்றது.

உசாத்துணை

  • மெண்டிஸ், ஜீ. ஸி. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969
  • பீ. எம். புன்னியாமீன். வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads