தலைமை அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலைமை அமைச்சர் அல்லது பிரதமர் (Prime minister) என்பவர் ஒரு நாட்டின் அமைச்சரவையின் தலைவர் ஆவார். பெரும்பாலும் தலைமை அமைச்சரே அமைச்சரவையின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதும் நீக்குவதுமான பணிகளைச் செய்வார். மேலும் அரசில் உறுப்பினர்களுக்கான பதவிகளை வகுப்பதும் இவரே. பெரும்பாலும் தலைமை அமைச்சர் அமைச்சரவைத் தலைவராக இருப்பார். ஒருசில அமைப்புகளில் தலைமை அமைச்சர் என்பவர் உள்நாட்டு சேவைகள் மற்றும் நாட்டின் தலைவரின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக இருப்பார்.
வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புகளில் தலைமை அமைச்சர் அரசின் தலைவராவார். அவருக்கே அனைத்து செயல்பாடுகளையும் செயலாக்கும் அதிகாரம் உள்ளது. இத்தகைய நாடாளுமன்ற அமைப்புகளில் நாட்டின் தலைவர் (குடியரசுத் தலைவர்) பெரும்பாலும் பெயரளவிற்கான அதிகாரங்களை மட்டுமே கொண்டிருப்பார். ஒரு சில சிறப்பு அதிகாரங்களைத் தவிர நாட்டின் தலைவருக்கு எத்தகைய செயலாக்குதல் அதிகாரமும் இருக்காது.
பெரும்பாலான அமைப்புகளில் தலைமை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தலைமை அமைச்சர் சட்டமுன்வரைவுகள் சட்டப்படி நிறைவேறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவராவார். மேலும், தலைமை அமைச்சர் தன்கீழ் ஒருசில முக்கியமான அமைச்சுகளை வைத்துக்கொள்வார். எடுத்துக்காட்டாக, இந்திய தலைமை அமைச்சர் திட்டமிடுதல் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளைத் தன் கீழ் வைத்துள்ளார்[1].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads