பிரமோத் குமார் சின்கா
சட்டமன்ற உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரமோத் குமார் சின்கா {Pramod Kumar Sinha))(பிரமோத் குமார சின்கா குசுவாகா) என்பவர் பீகாரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] 2020 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சின்னத்தில் ரக்சவுல் சட்டமன்றத் தொகுதியில் சின்கா வெற்றி பெற்றார்.[2][3][4][5]
Remove ads
அரசியல் வாழ்க்கை
சின்கா ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினராக இருந்தார், 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்பு சின்கா ஐக்கிய ஜனதா தளத்தின் மாவட்டத் தலைவராகப் பணியாற்றி வந்தார். பாஜகவில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் 2020 சட்டமன்றத் தேர்தலுக்கு ரக்சவுல் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார், அப்போது இருந்த சட்டமன்ற உறுப்பினர் அஜய் சிங்கிற்கு மாற்றாக சின்கா நிறுத்தப்பட்டார். சின்காவின் வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அஜய் சிங்கின் ஆதரவாளர்களால் போராட்டங்களில் ஈடுபட்டனர்; சின்காவுக்கு ஆதரவாக அஜயின் வேட்புமனுவை நிராகரிப்பது குறித்த பாஜக தலைமையின் முடிவை அஜய்யின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். 2022 ஆம் ஆண்டு சின்காவின் பதவிக் காலத்தில் ரக்சௌலில் ஒரு உணவு ஆய்வகம் நிறுவப்பட்டது.[1] பொருட்களின் தர சோதனை உள்ளூரில் நடைபெற இயலும் என்பதாலும், உணவுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகவும், சரக்குகளின் பகிர்தலை விரைவு படுத்துவதற்காகவும் இந்த ஆய்வகம் நிறுவப்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா ஒரு துணைப்பிரிவு மருத்துவமனையையும் திறந்து வைத்தார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads