பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் 1937-களில் பிரித்தானிய இந்தியாவில் தொடக்கப்பட்ட ஆன்மீக இயக்கமாகும்.[1][2][3] பிரம்ம குமாரிகள் இயக்கம் தாதா லேக்ராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.[4][5] பின்னாளில் இவரை பிரம்ம பாபா என அழைத்தனர்
இந்த அமைப்பு இராஜ யோக தியானம், ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் (சீவ-பரமாத்மா) பற்றி போதிக்கின்றது. இது அனைத்து ஆத்மாக்களும் உயர்வான நிலையையும் நல்ல பண்புகளையும் கொண்டதாக வலியுறுத்துகின்றது.[6]
Remove ads
தொடக்க வரலாறு

பிரம்ம குமாரிகள் அமைப்பு ஆரம்பகாலத்தில் "ஓம் மண்டலி" என்ற பெயருடன் இந்தியாவின், அன்றைய சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[7] இப்பெயர் இதன் பின்பற்றுனர்கள் தமது ஒவ்வொரு ஆன்மீக வெளிப்படுத்தலின் போதும் "ஓம் சாந்தி" என சங்கல்பம் எடுத்துக் கொள்வதால் ஏற்பட்டது. இது பகவத் கீதையுடன் தொடர்புபட்ட சங்கல்பமாகும்.[5] இதை தொடங்கின தாதா லேக்ராஜ் (ஓம் பாபா என அழைக்கப்பட்டவர்), நகை வணிகத்தில் ஈடுபட்ட சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவராவார்.[8]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads