பிரயோக விவேகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரயோக விவேகம் ஒரு இலக்கண நூல். இதே பெயருடைய வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது. இதனால் அவ்வடமொழி நூலைப்போலவே எழுத்திலக்கணம் கூறாது சொல்லிலக்கணம் மட்டுமே கூறுகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரைச் சேர்ந்தவருமான சுப்பிரமணிய தீட்சிதர் என்பார் இந்நூலை இயற்றினார்[1]. இந்நூலுக்கான உரையையும் இவரே எழுதியுள்ளார்.

நூற்கொள்கை

தமிழும் வடமொழியும் வேறல்ல என்றும் வடமொழியிலிருந்தே தமிழ் மொழி உருவானது என்றும் வடமொழி கற்றோரிடையே அக்காலத்தில் நிலவிய கருத்தையே இந்நூலும் வலியுறுத்துகின்றது.


சோழர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வடமொழிப் பரவலின் தாக்கத்தினால் விளைந்த புதிய இலக்கணத் தேவைகளையும் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் ஓரளவுக்கு நிறைவு செய்தது. எனினும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களான சைவசித்தாந்த சாத்திரங்கள், வைணவ நூல்கள், மணிப்பிரவாள நடையில் அமைந்த இலக்கியங்கள் என்பவற்றினூடாகத் தமிழுக்கு அறிமுகமான வடமொழி மரபு சார்ந்த இலக்கணக் கூறுகளை விளக்குவதற்கு ஏற்பட்ட தேவையை நிறைவு செய்வதற்காகத் தோன்றிய இலக்கண நூல்களுள் பிரயோக விவேகமும் ஒன்று[2]

Remove ads

அமைப்பு

இந்நூல் 51 காரிகைகளால் ஆன நான்கு படலங்களைக் கொண்டுள்ளது. இவை, காரகப் படலம், சமாசப் படலம், தத்தித படலம், திங்ஙுப் படலம் என்பன. இவற்றுள் 17 காரிகைகளைக் கொண்ட காரகப்படலம் வேற்றுமையைப் பற்றி விளக்குகிறது. 11 காரிகைகளாலான சமாசப் படலம் தொகைச்சொல் பற்றிக் கூறுகிறது. 6 காரிகைகளிலாலான தத்தித படலம் தத்திதாந்தச் சொற்கள் பற்றியும், 17 காரிகைகளிலாலான திங்ஙுப் படலம் வினைமுற்றுக்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன[3].

Remove ads

பதிப்புகள்

பிரயோக விவேகம் நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர். பின்னர் தி. வே. கோபாலையர் புதிய விளக்கக் குறிப்புகளுடனும், பின்னிணைப்புகளுடனும் வெளியிட்டார்.

  • சுப்பிரமணிய தீக்கிதர் இயற்றிய பிரயோக விவேகம் மூலமும் உரையும். பதிப்பாசிரியர்: பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர், எம். ஏ., பி. ஒ. எல்., தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு-147, 1973

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads