பிராச் மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிராச் மொழி (Braj Bhasha) என்பது ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது டைஹாத்தி ஸாபான் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மத்திய இந்தியாவைச் சேர்ந்த இம் மொழி, இந்தி மொழிக்கு நெருக்கமானதாகும். இந்தி மொழி, பிராச் மொழியின் கிளைமொழியாகவே கொள்ளப்படுவதும் உண்டு. 19-ஆம் நூற்றாண்டுக்கு முன் இதுவே இலக்கிய மொழியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரஜ் மொழி பேசப்படும் பகுதிகளை விரஜபூமி என்பர். இம்மொழி சுமார் 42,000 மக்களால் பேசப்படுகிறது. மகாபாரதக் கதையின் படி அக்காலத்தில் இது ஒரு நாடாக இருந்தது.
இன்று பிராஜ் பாஷா, மதுரா, பிருந்தாவனம், ஆக்ரா, பிரோசாபாத், ஹத்ராஸ், ஏட்டா, அலிகர், பரேலி, புலந்த்சாகர், பரத்பூர், தோல்பூர் ஆகிய விரஜபூமி பகுதிகளில் புழங்கிவருகிறது. மத்திய காலப் பகுதியில் பெரும்பாலான இந்தி இலக்கியம் இப்பகுதியிலேயே உருவானது. தற்காலத்தில், இந்தியின் இன்னொரு கிளைமொழியான கரிபோலி இதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது. சூர்தாசர் இம்மொழியில் பல பக்தி கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads