சூர்தாசர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இவர் உயர்ந்த ஞானி, நல்ல சமயபரப்புநர், சிறந்த சீர்திருத்தவாதியாவார். இவர் மதுரா அருகில் 1478-இல் பிறந்து, 1581 வரை வாழ்ந்தார். இவர் பிராஜ் மொழியில் மிகச் சிறந்த பக்தி இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் அனைத்தும் தான் விரும்பும் தெய்வத்தின் பால் செலுதத வேண்டிய அன்பையும் பக்தியையும் விளக்குகின்றார். இவர் எழுதிய சூர் சாகர், சூர் சாராவளி, சாகித்திய லஹரி என்ற நூல்கள் அன்பு, பக்தி இவற்றின் மேன்மையையும் கண்ணனைக் குழந்தையாய் கருதி சித்தரிக்கும் அற்புத நிலையையும் விளக்குகிறது. இவர் “வாழ்வு ஒரு விளையாட்டு, வீர தீரச் செயல், ஆனால் போராட்டமன்று; ஏமாற்றம் மிக்க கதையும் அன்று” என்கிறார். இவரது கவிதைகள் மனித இனத்தின் பால் வியத்தகு விளைவை ஏற்படுத்தியதுடன் பக்தி நெறியின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தன.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads