பிரான்சிஸ்கோ பிராங்கோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரான்சிஸ்கோ பிரான்கோ, (General Francisco Franco Y Bahamonde) எசுப்பானியாவின் இராணுவத் தலைவரும் சர்வாதிகாரியும் ஆவார். 1939 இலிருந்து தனது இறப்பு வரை எசுப்பானியாவைச் சர்வாதிகாரியாக ஆண்டார். ஐரோப்பிய வரலாற்றிலேயே அதிககாலம் ஆண்ட சர்வாதிகாரி இவர்.
Remove ads
சிறுவயது
எசுப்பானியா நாட்டில் அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியான கோரூஞா என்ற மாகாணத்தில் 1892ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி பிறந்தார். அங்குள்ள இராணுவ தேவாலயத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியின் படி டிசம்பர் 17 ல் ஞானஸ்நானம் பெற்றார். அவரின் தந்தை அந்நாட்டின் கடற்படையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆறு தலைமுறைகளாக இவரின் குடும்பம் கடற்படையில் வேலை செய்தது. (22 நவம்பர் 1855 முதல் 22 பிப்ரவரி 1942 வரை) இவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு.
Remove ads
இராணுவ வாழ்க்கை
பிரான்சிஸ்கோ தனது தந்தையின் வழியில் கடற்படையில் சேர முடிவெடுத்தார். ஆனால் எசுப்பானிய- அமெரிக்க போரின் விளைவாக நாடு காலனியாக மாறியத்தால் தன் கடற்படையை இழந்தது. அதனால் கடற்படைக்கு யாரும் தேர்வுசெய்யப்படவில்லை. கடற்படை அகாடமி 1906 முதல் 1913 வரை மூடப்பட்டது. அவரது தந்தையின் ஏமாற்றத்தால் பிரான்சிஸ்கோ எசுப்பானியா இராணுவத்தில் 1907 ல் சேர முயற்சித்தார். 1917 முதல் 1920 வரை, அவர் எசுப்பானிய இராணுவத்தில் பணியாற்றினார். இதன் மூலம் 1926ல் தனது இளம் வயதில் தளபதியானார். ..
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads