பிரிமென்றகடு

From Wikipedia, the free encyclopedia

பிரிமென்றகடு
Remove ads

முலையூட்டிகளில், நெஞ்சறையையும் (thoracic cavity) வயிற்றறையையும் (abdominal cavity) பிரிக்கும் ஒரு வன்கூட்டுத்தசையே பிரிமென்றகடு (Thoracic diaphragm or Diaphragm) ஆகும்[1]. இது உதரவிதானம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது விலா எலும்புகளால் அமைக்கப்பட்ட விலா எலும்புக்கூட்டின் (Rib cage) கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. மூச்சுவிடல் செயன்முறையில் இதற்கு ஓர் முக்கியப் பங்கு உண்டு.

மேலதிகத் தகவல்கள் பிரிமென்றகடு, இலத்தீன் ...
Remove ads

செயற்பாடு

மூச்சுவிடல் என்னும் உடற்றொழிலியல் செயல்முறையில் இந்தப் பிரிமென்றகடு முக்கிய பங்காற்றுகின்றது. விலா எலும்புத் தசைகளுடன் இணைந்து தொழிற்படும் இந்தப் பிரிமென்றகட்டுத் தசையில் ஏற்படும் சுருக்கமும், தொடர்ந்து ஏற்படும் தளர்ச்சியும் தொடர்ச்சியாக மாற்றி மாற்றி நிகழ்வதனால் நெஞ்சுக் கூட்டின் கனவளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதனால் உள்மூச்சு, வெளிமூச்சு நிகழ்வுகள் நிகழ்கின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads