பிரிவினை அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) என்பது இந்தியாவின், அமிர்தசரசின் டவுன் ஹால் கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும்.[1] பிரித்தானிய இந்தியாவானது இரு நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரிந்தபோது, அந்தப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுடன் தொடர்புடைய பொருட்கள், ஆவணங்கள், அடையாள அட்டைகள், அகதிகள் கொண்டுசென்ற ஆடைகள், டிரங்க் பெட்டிகள், கலைப் படைப்புகள் போன்றவை பதினான்கு கேலரிகளில் தொகுப்புக் களஞ்சியமாக இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகம் 17,000 சதுர அடியில் அமைக்கப்பட்டிருக்கிறது.[2] அருங்காட்சியகம் 2016 அக்டோபர் 24 அன்று திறந்து வைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

1947 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இந்தியாவானது இந்தியா, பாகிஸ்தான் என இருநாடுகளாக பிரிக்கப்பட்டது. பிரித்தானிய வழக்கறிஞர் சிரில் ராட்க்ளிஃப்பின் வரைபடத்தில் வரையப்பட்ட பிரிவினை எல்லைக் கோடுகள் பஞ்சாப் மாநிலத்தை மேற்கு பஞ்சாப் மற்றும் கிழக்கு பஞ்சாப் என சமய அடிப்படையில் பிரித்தது. இதன் விளைவாக, லட்சக்கணக்கானோர் ஒரே நாளில் தாங்கள் வாழும் நிலம் தங்களுக்கு எதிரான எல்லையில் இருப்பதைக் கண்டனர். பல்வேறு மதிப்பீடுகளின்படி, ஆகஸ்ட் 1947 முதல் ஜனவரி 1948 வரையிலான பிரிவினைக்குப் பின் ஏற்பட்ட கலவரங்களில் 800,000 க்கும் அதிகமான முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 1,400,000 க்கும் அதிகமானோர் அகதிகளாக ஆயினர்.

பஞ்சாப் அரசாங்கம் இந்த அருங்காட்சியகத்தை ஐக்கிய இராச்சியத்தின் கலை மற்றும் கலாச்சார மரபு அறக்கட்டளையுடன் (TAACHT) நிறுவியது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads