பிரெட்ரிக் எங்கெல்சு

From Wikipedia, the free encyclopedia

பிரெட்ரிக் எங்கெல்சு
Remove ads

பிரெட்ரிக் எங்கெல்சு (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; Friedrich Engels; நவம்பர் 28, 1820ஆகஸ்டு 5, 1895) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.[1]

விரைவான உண்மைகள் பிரெட்ரிக் எங்கெல்சுFriedrich Engels, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

இவர் பிரசியாவிலுள்ள, பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலகட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் ஹேக்கல் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார். மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.[2]

Remove ads

மார்க்சுடன் நட்பு

செருமனிக்கு செல்லும் வழியில் பாரீசில், கார்ல் மார்க்சை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். 1849-இல் செருமனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.

Remove ads

மதவாதத்தைப் பற்றி

மதவாதம் மக்களின் வாழ்வை மூச்சடக்கச் செய்து‍ கடுமையானதாக்கிக் கொண்டிருக்கிறது. மதவாத தத்துவமானது‍ சாதாரண மக்களின் அரசியல் நலன்களுக்கு‍ எதிரானது. முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகவே உள்ளது.

முதலாளித்துவத்தைப் பற்றி

முதலாளித்துவமானது‍ தொழிலாளிகளுக்கு‍ வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி உள்ளது. தன் வாழ்‌க்கை என்னவாகுமோ என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது.

முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பற்றி

முதலாளித்து‍வ பொருளாதாரத்தைப் பற்றி 1839 ஆம் ஆண்டு‍ அவர் இவ்வாறு‍ கூறுகிறார். முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன.

வரலாற்று‍ நூல்கள்

கார்ல் மார்க்சின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்சு ஆவார். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.

மறைவு

1895-ஆம் ஆண்டு ஆகஸ்டு‍ 5-ஆம் நாள் இறந்தார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads