பிறெட் லீ
ஆத்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிறெட் லீ (Brett Lee (பிறப்பு:நவம்பர் 8, 1976) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர் .
இவர் வலதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய முன்று வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். இவரின் சமகாலத்தவரான சுஐப் அக்தருடன் இணைந்து அறியப்படுகிறார். பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் உள்ள சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
விரைவாக அதே சமயம் நிலையான வேகத்தில் பந்து வீசுவதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினார். மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் பந்துவீச்சின் வேகம் மணிக்கு 161.8 கிலோ மீட்டர் என பதிவானது. பின் அது மணிக்கு 142 கிலோ மீட்டர் என உறுதிசெய்யப்பட்டது.[1]. 2005 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில்
மணிக்கு 161.1 கிலோ மீட்டர் எனும் வேகத்தில் பந்து வீசினார். இது இரண்டாவது அதிவேக பந்துவீச்சு ஆகும். சுஐப் அக்தர் மணிக்கு 161.4 கிலோ மீட்டர் என வீசியதே தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.
பிறெட் லீ தேர்வுத் துடுப்பாட்டங்களில் 310 இலக்குகளும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 380 இலக்குகளும் எடுத்துள்ளார்.
2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகிய இரு உலகக் கோப்பை வென்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 1999 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். சூலை 12, 2012 இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். ஆனால் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிக்பாஷ் போட்டிகளில் விளையாடினார்.[2]
2014-2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஷ் போட்டிகளோடு ஓய்வு பெற்றார். தற்போது நடிகராகவும், சேனல் 9 தொலைக்காட்சியின் விளக்கவுரையாளராக பணிபுரிகிறார்.[3]
Remove ads
சர்வதேச போட்டிகள்

சனவரி 9, 2000 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். இவர் 140 வது வீரராக அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களை எடுத்தார். இதில் 51* ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2006 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றார்.[4] 2003 ஆம் ஆண்டு துடுப்பாட்ட உலகக் கிண்ணப் போட்டியில் கென்ய துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஹேட்ரிக் இலக்குகள் எடுத்தார். இதன் மூலம்
உலகக் கிண்ணப் போட்டியில் ஹேட்ரிக் வீழ்த்திய முதல் ஆத்திரேலியப் பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.
Remove ads
2003 உலகக் கிண்ணம்
2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஷேன் வோர்ன் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பிறெட் லீ, ஆண்டி பிககெல், கிளென் மெக்ரா ஆகியோர் இந்தத் தொடரின் 55 இலக்குகளை வீழ்த்தினார். பிறெட் லீ மட்டும் 83.1
ஓவர்கள் வீசி 22 இலக்குகள் வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சராசரி 17.90 ஆகும்.
தேர்வுத் துடுப்பாட்டம்
நியூ சவுத் வேல்சு அணியில் இவருடன் விளையாடிய ஸ்டீவ் வா இவரின் ஆட்டத் திறனால் ஈர்க்கப்பட்டு இவரை தேசிய அணியில் இடம் இடம்பெறச் செய்தார். 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவருக்கு ஆத்திரேலிய தேசிய அணியில் இடம் கிடைத்தது. 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு 14 வீரர்களில் ஒருவாராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான 12 வீரர்களில் ஒருவராகத் தேர்வானார். ஆத்திரேலியாவின் 383 ஆவது வீரராகத் தேர்வானார்.
இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். தான் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் சடகோபன் ரமேசினை ஆட்டம்ழிஅக்கச் செய்தார். மேலும் ராகில் திராவிட்டின் இலக்கினையும் வீழ்த்தினார். ஆறு பந்துகளில் மூன்று இலக்கினைக் கைப்பற்றினார். அந்த ஆட்டப் பகுதியில் 17 ஓவர்கள் வீசி 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் டென்னிஸ் லில்லீக்குப் பிறகு ஐந்து இலக்குகளை அறிமுகப் போட்டியில் வீழ்த்திய வீரர் இவரே. தனது முதல் போட்டியில் 13 இலக்குகளை வீழ்த்தினார்.[5] அவரின் பந்துவீச்சு சராசரி 14.15 ஆக இருந்தது.
2000 ஆம் ஆண்டில் டொனால்ட் பிராட்மன் நினைவாக வழங்கப்பட்ட விருதின் முதல் ஆண்டின் சிறந்த இளம் வீரராகத் தேர்வானார்.
தனது முதல் மூன்று தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்களில் இவர் 42 இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் விரைவாக இந்த இலக்கினைக் கைப்பற்றியவர் எனும் சாதனை படைத்தார்.[6] 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதன் முதல் ஆட்டப் பகுதியில் தனது முதல் ஐமது ஓட்டங்களை அடித்தார். மேஎலும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஏழு இலக்குகளையும் கைப்பற்றினார்.[7] பின் காயம் காரணமாக அடுத்த மூன்ரு தொடர்களில் இவரால் விளையாட இஅயலவில்லை. பின் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார். ஆனால் மீண்டும் காயம் ஏற்படவே 2001 மே மாதம் வரை ஓய்வில் இருந்தார்.
காயத்திற்குப் பிறகு
காயத்தில் இருந்து மீண்டு 2001 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடினார். ஆனால் அந்து போட்டிகளில்விளையாடி ஒன்பது இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார். இருந்தபோதிலும் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் மற்றும் மூன்ராவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய ஆத்திரேலிய வீரரானார். மேலும் முதல் ஆட்டப் பகுதியில் 61 ஓட்டங்களையும் எடுத்தார். ஆனால் தொடர் சமனானது. அட்தத் தொடரின் முடிவில் 14 இலக்குகளைக் கைப்பற்றினார்.
நியூசிலாந்து மற்றும் 2003 ஆம் ஆண்டில்நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரிகளில் லீ ஐந்து இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார். மேலும் 2002 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் ஐந்து இலக்குகளை 46.50 எனும் சராசரியில் பெற்றார். அதன்மூலம் அவருக்கு அணியில் இடம்கிடைப்பதில் சிக்கல் வந்தது. ஜேசன் கில்லெஸ்பி காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக விளையாட வந்த ஆண்டி பைசல் எட்டு இலக்குகளை 13.25 எனும் சராசரியில் பெற்றார். முதனமைப் பந்துவீச்சாளர்கள் அனைவரும் 13 க்கும் குறைவான சராசரியில் இலக்கினை வீழ்த்தினர்.[8]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads