பிலாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிலாய் அல்லது பிலாய் நகர் (Bhilai, இந்தி:भिलाई) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலதில் துர்க் மாவட்டத்தின் நிர்வாக தலைமையிட நகரமாகும். 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 753,837 ஆகும்.[1] 11 கி.மீ. தொலைவிலுள்ள துர்க்குடன் இணைந்த துர்க்-பிலாய் பெருநகரின் மக்கள்தொகை 2005ஆம் ஆண்டில் 1.062 மில்லியனாக இருந்தது.[2] மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில் ஹௌரா–மும்பை இருப்புப் பாதையில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆறிலும் அமைந்துள்ளது.
இங்குள்ள பிலாய் எஃகு தொழிற்சாலை பொகாரோ எஃகுத் தொழிற்சாலைக்கு அடுத்த மிகப் பெரிய தொழிற்சாலையாகும்.[3] 50,000 தொழிலாளிகள் வேலை செய்யும் இந்த ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா தொழிற்சாலை 1959ஆம் ஆண்டு சோவியத்-இந்திய கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது. பிலாய்க்குத் தெற்கே சுற்றியுள்ளப் பகுதிகளிலிருந்து இந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய இரும்புத் தாது அகழ்ந்தெடுக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளும் பள்ளிகளும் இந்த ஆலை நிர்வாகத்தால் நிறுவப்பட்டுள்ளன. 1986ஆம் ஆண்டு முதல் பிலாய் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்டுள்ளது.
Remove ads
போக்குவரத்து

இங்கு மூன்று தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன:
- பிலாய் (பிலாய் 3)
- பிலாய் பவர் அவுஸ்
- பிலாய் நகர்
அண்மையிலுள்ள துர்க் தொடர்வண்டி நிலையமும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல விரைவு தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
உள்ளூரில் டெம்போ எனப்படும் மூன்று சக்கர வண்டிகள் நம்பகமான போக்குவரத்து வசதிகளுக்குப் பன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads