பிளாசி சண்டை

1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும், வங்காளத்தின் நவாப் சிராச் உத் தவ்லாவிற்கும From Wikipedia, the free encyclopedia

பிளாசி சண்டைmap
Remove ads

23.80°N 88.25°E / 23.80; 88.25

விரைவான உண்மைகள் பிளாசி போர், நாள் ...

பிளாசி போர் (Battle of Plassey) 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும், வங்காளத்தின் நவாப் சிராச் உத் தவ்லாவிற்கும் இடையே நடைபெற்ற ஒரு போர். இதில் கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி பெற்று வங்காளத்தைக் கைப்பற்றியது. இவ்வெற்றியே இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தோன்றியதன் முதல் படியாகக் கருதப்படுகிறது.

பிளாசி போர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாகும். ஆற்காடு நவாப் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றிருந்தார். பிரித்தானியக் கோட்டையாக விளங்கிய கல்கத்தாவைத் தாக்கி பல ஆங்கிலேயர்களைக் கொன்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஆங்கிலேயப் படைகள் வங்காளத்தைத் தாக்கின. பளாஷி (பிளாசி) என்ற இடத்தில் இரு தரப்பின் படைகளுக்கும் இடையே இறுதிகட்ட மோதல் ஏற்பட்டது. ராபர்ட் கிளைவ் தலைமையிலான கம்பனி படைகளைக் காட்டிலும் நவாபின் படைகள் பன்மடங்கு எண்ணிக்கை கொண்டிருந்தன. இதனால் கிளைவ் நவாபின் தளபதி மீர் ஜாஃபருடன் ஒரு சதித்திட்டம் தீட்டினார். இச்சதியின் விளைவாக மீர் ஜாஃபரின் கட்டுப்பாட்டிலிருந்த படைப்பிரிவுகள் போரின் போது கம்பனிப் படைகளைத் தாக்காமல் ஒதுங்கிக் கொண்டன. மீர் ஜாஃபரின் அணிமாற்றத்தால், கிளைவ் எளிதில் வெற்றி பெற்றார்.

Remove ads

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads