பி. பி. குமாரமங்கலம்

இந்திய இராணுவத் தளபதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜெனரல் பரமசிவ பிரபாகர் குமாரமங்கலம் அல்லது ஜெனரல் குமாரமங்கலம் (General Paramasiva Prabhakar Kumaramangalam) , (1 சூலை 1913 – 13 மார்ச் 2000) , இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவராக 1967 முதல் 1970 வரை பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947, இந்திய சீனப் போர், மற்றும் 1965இந்திய-பாகிஸ்தான் போர்களில் பங்கெடுத்தவர். பிரித்தானிய இந்தியப் பேரரசின் இராணுவ விருதுகளை பெற்றவர்.

விரைவான உண்மைகள் ஜெனரல் பி. பி. குமாரமங்கலம், பிறப்பு ...
Remove ads

இளமை வாழ்க்கை

மோகன் குமார மங்கலத்தின் உடன் பிறப்பான பி. பி. குமாரமங்கலம், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரான சுப்பராயனின் மகன் ஆவார். இங்கிலாந்து நாட்டின் ஈடன் கல்லூரியிலும், ராயல் இராணுவக் கழகத்திலும் படித்தவர். முதலில் பிரித்தானியப் பேரரசிலும், பின்னர் 12 நவம்பர் 1934இல் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் தரைப்படையில் அதிகாரியாகச் சேர்ந்தார்.[1][2] 2 மே 1935இல் லெப்டினண்ட் அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டார்.[3]

Remove ads

இராணுவப் பணி

இரண்டாம் உலகப்போரில் லிபியாவில் நடந்த போரில், இத்தாலி மற்றும் ஜெர்மன் இராணுவத்தால் போர்க் கைதியாக பிடிக்கப்பட்டு போரின் முடிவில் விடுவிக்கப்பட்டார்.[4]

இந்திய விடுதலைக்குப்பின் மே 1963இல் கிழக்கு மண்டல படைத்தலைவராகவும், 8 சூன் 1966இல் இந்தியத் தரைப்படையின் தலைமைப் படைத்தலைவராக பதவி உயர்வு பெற்றவர். 36 ஆண்டு இராணுவப் பணியாற்றிய குமாரமங்கலம், 7 சூன் 1969இல் பணி ஓய்வு பெற்றார். 1970இல் பத்ம விபூசன் விருது பெற்றார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads