இந்தியப் பாதுகாப்புப் படைகள்
இந்தியக் குடியரசின் முப்படைகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய இராணுவ படைகள் (தேவநாகரி: भारतीय सशस्त्र सेनाएं) இந்திய குடியரசின் இராணுவ படைகள் ஆகும். இந்திய இராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமான படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை என நான்கு தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன. இந்திய ஜனாதிபதி இராணுவ தலைமை கமாண்டராக இருக்கிறார், மேலும் இந்திய இராணுவப் படை ஒரு நான்கு நட்சத்திர இராணுவ தளபதியால் கட்டுப்படுத்தப்பட்டுகிறது. மேலும், இந்திய ஆயுதப்படைக்கு பல துணைப்படை அமைப்புகள் (அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புற பாதுகாப்பு படை) மற்றும் சேவைகளிடை உளவுத்துறை நிறுவனங்கள் துணைபுரிகின்றன.
இந்திய ஆயுதப்படைகள் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் தலைமையிலான மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.இந்திய இராணுவம் 1.3 மில்லியன் தீவிர ஊழியர்கள் கொண்டு உலகின் 3 வது மிக பெரிய இராணுவ சக்தியாக இருக்கிறது.
இந்திய ஆயுத படைகள் 1947, 1965 மற்றும் 1971 ல் இந்திய-பாகிஸ்தான் போர், 1971, கோவா படையெடுப்பு, இந்திய சீன போர், கார்கில் போர் மற்றும் சியாச்சின் மோதல் உட்பட பல முக்கிய இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஆயுதப் படையானது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும்.
இந்திய இராணுவமே உலகின் மிக பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.[8] தற்போது ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இந்திய இராணுவத்திற்கு உபகரணங்கள் அளிக்கும் முதன்மை வெளிநாடுகள் ஆகும்.[9][10][11]. ஏறக்குறைய 1.32 மில்லியன் செயலார்ந்த படைகளையும் , 2.14 மில்லியன் இருப்பு படைகளையும் கொண்டுள்ளது. இந்தியா $ 36.03 பில்லியன் இராணுவத்திற்காக செலவிடுகிறது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83% ஆகும்.
Remove ads
வரலாறு
இந்தியத் தரைப்படை
இந்திய கடற்படை




இந்திய கடற்படை இந்திய இராணுவத்தின் கடற்படை பிரிவாகும். இந்திய கடற்படை விமான பிரிவு, 1,200 கடல் செயல் வீரர்கள் (மார்கோஸ்) 7,000 பணியாளர்கள் மற்றும் 1,000 இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் உட்பட 58,350 ஆண்கள் மற்றும் பெண்களும் உள்ள உலகின் மிக பெரிய கடற்படை ஆகும்.[12][13]
படைபலம்
2006 இன் படி
பிரிவு | செயலார்ந்த பணி | இருப்பு |
![]() | 1,325,000 | 2,142,821 |
![]() | 55,000 | |
![]() | 170,000 | |
இந்தியக் கடலோர காவல்படை | 19,741 | |
![]() | 1,300,586 |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads