பீசாவின் சாய்ந்த கோபுரம்

From Wikipedia, the free encyclopedia

பீசாவின் சாய்ந்த கோபுரம்map
Remove ads

பீசாவின் சாய்ந்த கோபுரம் (Leaning Tower of Pisa இத்தாலியம் [ˈtorre di ˈpiːza; ˈpiːsa][1])) இத்தாலியின் பீசா நகரில் உள்ள பீசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

விரைவான உண்மைகள் பீசாவின் சாய்ந்த கோபுரம், அடிப்படைத் தகவல்கள் ...

நிலத்திலிருந்து கோபுரத்தின் உயரம் 55 மீட்டர் ஆகும். இதன் நிறை 14,500 tonnes (16,000 short tons). என்று கணிக்கப்பட்டுள்ளது.[2] இதன் தற்போதைய சரிவு சுமார் 10%. இது 297 படிகளைக் கொண்டுள்ளது.

இத்தாலிய அரசாங்கம் இந்த சாயும் கோபுரம் விழுந்து விடாமல் பாதுகாக்க உதவும்படி 1964, பெப்ரவரி 27ல் கோரிக்கை விடுத்தது.

1990, சனவரி 7ல் இக் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

அண்மையில் கோபுரத்தின் சரிவுக் கோணத்தைக் குறைப்பதற்காகச் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 10 ஆண்டு வேலைகளுக்குப்பின் 2001, சூன் 16ல் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads