புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை
கூட்டரசு சாலை 217 (மலேசியா) From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை அல்லது பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 217 (மலேசியா) (ஆங்கிலம்: Bukit Jalil Highway அல்லது Federal Route 217; மலாய்: Lebuhraya Bukit Jalil) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.
கட்டணமில்லா நெடுஞ்சாலையான இந்தச் சாலை சா ஆலாம் விரைவுச்சாலைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நெடுஞ்சாலையாகும். இது கிழக்கில்
சுங்கை பீசி விரைவுச்சாலையை இணைக்கிறது; மேற்கில் பூச்சோங் ஜெயா அருகே
டாமன்சாரா–பூச்சோங் விரைவுச்சாலையை இணைக்கிறது.
Remove ads
பொது
இந்த நெடுஞ்சாலை கின்ராரா மற்றும் புக்கிட் ஜாலில் நகரங்களைக் கடந்து செல்கிறது.[1]
புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையின் ‘0’ கிலோமீட்டர் (Kilometre Zero), சிலாங்கூர், பூச்சோங் அருகே பூச்சோங் ஜெயா சாலைச் சந்திப்பில் தொடங்குகிறது. பூச்சோங்கில் உள்ள பூச்சோங் நகர மையத்தில் ‘0’ கிலோமீட்டர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
இந்தப் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை, 1998-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது (1998 Commonwealth Games), சா ஆலாம் விரைவுச் சாலைக்கு அடுத்த நிலையில், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு வளாகத்திற்குச் செல்லும் இரண்டாவது முக்கிய நெடுஞ்சாலையாக மாறியது.
2004-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை கூட்டரசு சாலை 217 (மலேசியா) என்று மலேசிய அரசிதழில் பதிவு செய்யப்பட்டது. வேக வரம்பு 90 கி.மீ. வரை அனுமதிக்கப் படுகிறது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads