புசுகர் கண்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புசுகர் கண்காட்சி, புசுகர் ஒட்டகக் கண்காட்சி அல்லது உள்நாட்டில் கார்த்திகை மேளா அல்லது புசுகர் கா மேளா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அஜ்மீர் நகருக்கு அருகிலுள்ள புஷ்கர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பல நாள் கால்நடைக் கண்காட்சி மற்றும் கலாச்சார விழாவாகும் . இந்தக் கண்காட்சி இந்து நாட்காட்டி மாதமான கார்த்திகை மாதத்தில் தொடங்கிக் கார்த்திகை பௌர்ணமியில் முடிவடைகிறது, இது பொதுவாகக் கிரிகோரியன் நாட்காட்டியின்படி அக்டோபர் பிற்பகுதியிலோ அல்லது நவம்பர் தொடக்கத்திலோ ஒன்றி வரும். 1998 ஆம் ஆண்டில், ஆண்டு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் புஷ்கருக்கு வந்தனர். புசுகர் கண்காட்சி மட்டும் 200,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது.
புசுகர் கண்காட்சி [1] இந்தியாவின் மிகப்பெரிய ஒட்டகம், குதிரை மற்றும் கால்நடைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். கால்நடை வர்த்தகம் தவிர, புசுகர் ஏரிக்கு இந்துக்களுக்கு இது ஒரு முக்கியமான புனித யாத்திரைப் பருவமாகும். குளிர் காலப் பருவமும், வண்ணமயமான கலாச்சார கருப்பொருள்களும் ஏராளமாக இருப்பதால், இக்கண்காட்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது. கலாச்சார நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடனங்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போன்ற பல போட்டிகளும் நடப்பதுண்டு. மிக நீண்ட மீசையைக் கொண்டவருக்கான போட்டியும் மணமக்கள் போட்டியும் கூட நடக்கும். [2] [3] [4]
கண்காட்சி நடக்கும் புசுகர் ஏரியின் கரைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். ஆண்கள் தங்கள் கால்நடைகளை வியாபாரம் செய்கிறார்கள், அதில் ஒட்டகங்கள், குதிரைகள், மாடுகள், செம்மறி ஆடுகள் ஆகியவை அடங்கும். [5] வளையல்கள், துணிகள், ஜவுளிகள் மற்றும் துணியால் ஆன கைவினைப்பொருட்கள் கடைகளில் கிராமப்புற குடும்பங்கள் பொருள்களை வாங்குவதில் விருப்பத்துடன் ஈடுபடுகின்றனர். இசை, பாடல்கள் மற்றும் கண்காட்சிகளுடன் திருவிழாவில் ஒட்டகப் பந்தயம் தொடங்குகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இடையில், ஒட்டகத்தால் பொருட்களை எவ்வாறு கொண்டு வர முடியும் என்ற சோதனையோட்டம் மிகவும் விருப்பத்துடன் எதிர்நோக்கப்படுகிறது.
புசுகர் ராஜஸ்தானின் மத்திய-கிழக்கு பகுதியில், ஆரவல்லி மலையின் மேற்குப் பகுதியில் உள்ளது. புசுகருக்கு அருகிலுள்ள விமான நிலையம் அஜ்மீரில் உள்ள கிஷன்கர் விமான நிலையம் ஆகும். இது அஜ்மீரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்கள்) வடகிழக்கில் அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. புசுகர் அஜ்மீரிலிந்து 10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) தொலைவில் இருக்கும். அஜ்மீரிலிருந்து, ஆரவல்லி மலைத்தொடரின் மேல் செல்லும் புசுகர் சாலை (நெடுஞ்சாலை 58) வழியாக இணைக்கப்பட்டுள்ளது. அஜ்மீரே மிக அருகில் உள்ள முக்கியத் தொடருந்து நிலையமுமாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads