அஜ்மீர்
இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள நகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஜ்மீர் (ஆங்கிலம்: Ajmer) என்பது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள அஜ்மீர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். ஆரவல்லி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள இந்த நகரம் பிருத்திவிராச் சௌகான் என்னும் புகழ் பெற்ற மன்னனின் தலைநகரங்களில் ஒன்றாக இருந்தது.
Remove ads
புவியியல்
அஜ்மீர் புறநகர்ப் பகுதியானது, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 502.34 மீட்டர் (1648.10 அடி) உயரத்தில், 26.4499°N 74.6399°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.[1]
மக்கள் வகைப்பாடு
2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 485,197 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 52% ஆண்கள்; 48% பெண்கள் ஆவார்கள். அஜ்மீர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. அஜ்மீர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads