புதிய ஒல்லாந்து (ஆத்திரேலியா)

From Wikipedia, the free encyclopedia

புதிய ஒல்லாந்து (ஆத்திரேலியா)
Remove ads

புதிய ஒல்லாந்து (New Holland, டச்சு: Nova Hollandia) என்பது ஆத்திரேலியத் தீவுக் கண்டத்திற்கு சூட்டப்பட்ட வரலாற்று நோக்கிலான பெயர். முதன் முதலில் ஆத்திரேலியாவை 1644 ஆம் ஆண்டில் ஏபெல் டாசுமான் என்ற டச்சு கடற்பயணி டச்சு மாகாணமான ஒல்லாந்தின் பெயரால் Nova Hollandia (நோவா ஓலாண்டியா) என்ற பெயரில் அழைத்தார். இப்பெயர் 180 ஆண்டுகளாக அந்நாட்டிற்கு நிலைத்திருந்தது.

Thumb
வில்லியம் டாம்பியர் என்பவரால் 1699 இல் வரையப்பட்ட புதிய ஒல்லாந்தின் ஒரு பகுதியின் வரைபடம்

வில்லியம் டாம்பியர் (1651-1715) என்ற ஆங்கிலேய மாலுமி இப்பகுதிக்கு சென்று இப்பெயரைத் தனது ஆய்வுகளில் பயன்படுத்தியிருந்தார்[1].

1788 ஆம் ஆண்டில் இக்கண்டத்தின் கிழக்குக் கரையில் நியூ சவுத் வேல்சில் ஆங்கிலேயக் குடியேற்றம் துவங்கிய காலத்திலிருந்து நியூ சவுத் வேல்சுடன் இணைக்கப்படாத ஏனைய பகுதிகளையே புதிய ஒல்லாந்து என்ற பெயரில் அழைத்தனர். இதனால் இப்போதைய மேற்கு ஆத்திரேலியாவே புதிய ஒல்லாந்து என்ற அழைக்கப்பெற்றது.

மத்தியூ பிலிண்டேர்சு (1774-1814) முழுக்கண்டத்திற்கு ஆசுத்திரேலியா என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் எனக் காலனித்துவ அரசிற்குப் பரிந்துரைத்தார். இப்பரிந்துரை அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படாவிடினும், பின்னர் 1824 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தினால் ஆசுத்திரேலியா என்ற பெயர் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நெதர்லாந்தில் 19ம் நூற்றாண்டின் இறுதிவரையில் இக்கண்டம் Nieuw Holland என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads