புருஷார்த்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புருஷார்த்தம் (சமஸ்கிருதம்: पुरुषार्थ, IAST: Puruṣārtha) என்பது இந்து சமய சித்தாந்தத்தின்படி மனித வாழ்க்கையின் நான்கு நேரான குறிக்கோள்கள் அல்லது நோக்கங்களைக் குறிக்கிறது. இந்து மரபிலே வலியுறுத்தப்படும் அறநெறிகளில் புருஷார்த்தங்களும் ஒன்றாகும். "மனித நாட்டத்தின் பொருள்" என்பதாகப் பொருட்படும் புருஷார்த்தமானது, மனிதனால் அடையப்பட வேண்டிய ஒன்றாகும். இச்சிந்தனை இந்து மதத்தில் ஒரு மையக் கருத்தாகும்.[1] நான்கு புருஷார்த்தங்களாவன தர்மம் (அதாவது நீதி, தார்மீக சிந்தனைகள்), அர்த்தம் (செழிப்பு, பொருளாதாரப் பயன்கள்), காமம் (இன்பம், அன்பு, உளவியல் பொருட்கள்), மற்றும் மோட்சம் (வீடுபேறு, ஆன்மீகச் சிந்தனைகள், மெய்யுணர்தல்) ஆகியனவாகும்.[2][3] தமிழில் இவை முறையே அறம், பொருள், இன்பம், மற்றும் வீடு (அல்லது வீடுபேறு) எனப்படுகின்றன.
நான்கு புருஷார்த்தங்களுமே முக்கியமானவை தான் என்றாலும் ஒன்றை மட்டுமே கைகொள்ளும் நிலை வரின் தர்மமே அர்த்ததையும் காமத்தையும் விட முக்கியமானது என்று இந்து தத்துவத்தில் கூறப்படுகிறது.[4][5] மோட்சம் மனித வாழ்வின் இறுதி இலட்சியமாகக் கருதப்படுகிறது.[6] எனினும் மோட்சத்தைக் குறித்து இந்துக்களிடையே பலவகையான கருத்துகளும் விளக்கங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றில் அறிஞர்கள் பலரும் அர்த்தம், காமம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒருவித உள்ளார்ந்த பதற்றம் இருப்பதைச் சுட்டியுள்ளனர். மேலும் மோட்சம் எனப்படும் ஆன்மீகத் தேடலுக்காக அனைத்து செல்வங்களையும் இன்பத்தையும் துறக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர். இதற்காகவே அவர்கள் நிஷ்காம கர்மம் என்ற "தன்னலமற்று அல்லது பற்றற்று செயல்படும்" விதத்தை அர்த்தத்திற்கும் காமத்திற்கும் இடையேயுள்ள இப்பதட்டத்திற்கு ஒரு தீர்வாக முன்மொழிந்துள்ளனர்.[7][8]
Remove ads
இவற்றையும் பார்க்க
தரவுகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads