புர்ஜ் கலிஃபா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும்[5]. 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 2010, சனவரி 4 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது [1][2][6]..
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |

இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ் வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ் என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார்[7][8]. இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (AMAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக தென்கொரியாவைச் சேர்ந்த Samsung T&T இருந்தது[9].
இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.

Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads