புஷ்கர்-காயத்ரி

இந்திய இரட்டை இயக்குநர்கள் From Wikipedia, the free encyclopedia

புஷ்கர்-காயத்ரி
Remove ads

புஷ்கர்-காயத்ரி ( Pushkar–Gayathri ) தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஒரு கணவன்-மனைவி திரைப்பட இயக்குநர்கள் ஆவர். இவர்களின் படைப்புகள் அவற்றின் தனித்துவமான பாணி, தொழில்நுட்ப நுணுக்கம் மற்றும் நுணுக்கமாக பின்னப்பட்ட கதைக்களங்களுக்காக குறிப்பிடப்படுகின்றன.

விரைவான உண்மைகள் புஷ்கர்-காயத்ரி, தேசியம் ...
Remove ads

தொழில் வாழ்க்கை

ஓரம் போ (2007), மற்றும் வ குவாட்டர் கட்டிங் (2010) ஆகிய தமிழ்த் திரைப்படங்களின் மூலம் இவர்கள் திரைக்கதை ஆசிரியர்களாகவும் மற்றும் இயக்குனர்களாகவும் தங்களதி திரை வாழ்க்கையைத் தொடங்கினர். 2017 இல், இவர்கள் எழுதி இயக்கிய விக்ரம் வேதா, அந்த ஆண்டு பல விருதுகளை வென்றது.[1]
[2] மேலும் ஐ. எம். டி. பி இணையத்தளத்தில் 2017 இன் சிறந்த தரமதிப்பீடு பெற்ற இந்தியத் திரைப்படமானது. 2022 இல், கிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் ஆகிய இருவை வைத்து விக்ரம் வேதாவை இந்தியில் மறு ஆக்கம் செய்தனர். இருப்பினும், அசல் தமிழ் பதிப்பைப் போலல்லாமல், இது கலவையான விமர்சனங்களுக்கு ஆளானது. மிகப்பெரிய வணிகத் தோல்வியைச் சந்தித்தது.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான சுழல்: த வோர்டெக்ஸ் என்ற தமிழ் மொழி வலைத்தொடர் மூலம் இவர்கள் இயக்குநர்களானார்கள்.[3][4][5][6][7]

தங்களின் தயாரிப்பு நிறுவனமான வால்வாட்சர் பிலிம்ஸின் கீழ், புஷ்கரும் காயத்ரியும் அமேசான் பிரைம் வீடியோவுக்காக, சுழல்: த வோர்டெக்ஸ் மற்றும் வதந்தி: தி ஃபேல் ஆஃப் வெலோனி ஆகிய இரண்டு நீண்ட வலைத் தொடர்களையும், நெட்ஃபிளிக்சுக்காக ஏலே என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளனர்.

Remove ads

விருதுகள்

இவர்கள் ஆனந்த விகடன் சினிமா விருது,[8] 65ஆவது தென்னிந்தியத் திரைப்பட விருது , நோர்வே தமிழ்த் திரைப்பட விருது,[9][10] 10ஆவது விஜய் விருதுகள் [11][12] போன்ற பல விருதுகளையும் வென்றுள்ளனர்.[13]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads