விஜய் விருதுகள்

From Wikipedia, the free encyclopedia

விஜய் விருதுகள்
Remove ads

விஜய் விருதுகள் (The Vijay Awards) ஸ்டார் விஜய் தொலைக்காட்சி என்ற தமிழ் தொலைக்காட்சி குழுமத்தால் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளாகும். இவ்விருதுகள் 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கொரு முறை வழங்கப்படுகின்றன.[1]. இந்த விருதுகளில் பொதுமக்களே ஆறு பிரிவுகளில் தங்களுக்குப் பிடித்தவர்களை வாக்குகள்மூலம் விருதுக்குத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.[2][3]

விரைவான உண்மைகள் விஜய் விருதுகள், விளக்கம் ...
Remove ads

வரலாறு

விஜய் விருதுகள் முதல் விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகள் அனைத்தும், 2005ஆம் வருடத்துக்கு மட்டும் கொடுக்கப்படாமல், 2006 வரை வெளியான அனைத்து திரைப்படங்களையும் சேர்த்து கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டது. அதில் வாக்களித்த மக்களுக்கும் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் வந்த அனைத்து திரைப்படங்களில் இருந்தும் தங்களுக்குப் பிடித்த ஒரு படத்துக்கு அல்லது திரைப்படத் துறையைச் சேர்ந்தவருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் படி 2006 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு - பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்கம், இசை, பின்னணிப் பாடகர், பின்னணிப் பாடகி, எதிர் நாயகன்(வில்லன்), நகைச்சுவை நடிகர் போன்ற ஒன்பது துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தரப்பட்டன. அது மட்டுமின்றி, மேலும் 10 விருதுகள் இவ்விழாவைச் சேர்ந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும் கொடுக்கப்பட்டன. இந்த முறைமை விஜய் விருதுகள் இரண்டாம் விழாவில் மாற்றியமைக்கப்பட்டது. அதன் படி மக்கள் வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதுகளில் 5 விருதுகள் நீக்கப்பட்டு 2 விருதுகள்(பாடல், கேளிக்கையாளர் 2008 முதல்) சேர்க்கப்பட்டு, மொத்தம் 6 விருப்ப விருதுகள்(பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்கம், பாடல், கேளிக்கையாளர்) கொடுக்கப்பட்டன.[4][5][6]

Remove ads

விருதுகள்

விஜய் விருதுகள் 3 வகைப்படும். அவை நடுவர் விருதுகள், விருப்ப(மக்கள்) விருதுகள், விலக்கப்பட்ட விருதுகள்.

நடுவர் விருதுகள்

விருப்ப விருதுகள்

விலக்கப்பட்ட விருதுகள்

சில விருதுகள் 2006 ஆம் ஆண்டில் மட்டும் கொடுக்கப்பட்டு அதன் பிறகு விலக்கப்பட்டு விட்டன. அவை அனைத்தும் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருப்ப விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது.[7]

  • விருப்பமான இசையமைப்பாளர் (2006 இல் மட்டும்) - ஏ.ஆர். ரகுமான்
  • விருப்பமான எதிர்நாயகன் (2006 இல் மட்டும்) - பிரகாஷ் ராஜ்
  • விருப்பமான பின்னணிப் பாடகர் (2006 இல் மட்டும்) - பாலசுப்பிரமணியன்
  • விருப்பமான பின்னணிப் பாடகி (2006 இல் மட்டும்) - ஜானகி
  • விருப்பமான நகைச்சுவை நடிகர் (2006 இல் மட்டும்) - விவேக்
  • விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்)
விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்) என்ற விருது, விஜய் விருதுகள்(2006) நிகழ்ச்சியில் மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு விருதாகும். இதை நடிகர் விஜய், அவர் நடித்த திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய திரைப்படங்களுக்காக வாங்கினார். இது விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதாகும். அதன் பிறகு இந்த விருது 2011 ஆம் ஆண்டு வரைக்கும் யாருக்கும் வழங்கப்படவில்லை.[7]
Remove ads

விழாக்கள்

இவ்விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. முதல் விருது விழா மட்டும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு அவ்வாறு செய்யப்படவில்லை. இவ்விழா விஜய் தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பப்படும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாக்கள் வழக்கமாக (முதல் விழா தவிர்த்து) மே அல்லது சூன் மாதங்களில் தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகள் விழாவுக்கு முன்னரே கொடுக்கப்படுகின்றன.

மேலதிகத் தகவல்கள் எண், விழா ...

உயர்நிலைகள்

ஒரே விழாவில் அதிக விருது பெற்ற திரைப்படம்
ஒரே விழாவில் அதிக விருது பெற்றவர்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளிப்பற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads