பூட்டும் கல் (கட்டடக்கலை)
கட்டிடங்களில் உள்ள மேல் வளைவின் உச்சியில் உள்ள கல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூட்டும் கல்[1], கமான் உச்சிக்கல் அல்லது வளைவு முட்டுக்கல் (ஆங்கிலத்தில் keystone (இது கேப்ஸ்டோன் capstone என்றும் அழைக்கப்படுவதுண்டு) என்பது கட்டிடங்களில் உள்ள வளைவுகளின் உச்சியில் உள்ள ஆப்பு வடிவ கல் ஆகும். இந்த முட்டுக்கல்தான் அந்த வளைவின் அழுத்தத்தையும், அதற்கு மேல் உள்ள கட்டிடத்தின் எடையையும் தாங்குகிறது.[2][3][4] இந்தக் கல்லை அழகாகத் தோற்றமளிப்பதற்காக பெரிய அளவில் வடிவமைத்தனர். அவற்றில் சிறு சிற்ப வேலைகளைச் செய்வதும் வழக்கமாக இருந்தது. அந்த வளைவின் அழகே இதை மையப்படுத்தித்தான் இருக்கும். இந்த முட்டுக்கல்லானது பெரும்பாலும் கதவுகள், சாளரங்கள் அமைந்துள்ள பகுதியின் உள்ள வளைவின் மையத்தில் அலங்கார வேலைப்பாடுகளுடன் வைக்கப்பட்டிருக்கும்.



வளைவுகளுக்குப் பூட்டும் கல் மிகவும் தேவையென்றாலும் அவற்றில் அதுதான் அதிக அழுத்தத்தைத் தாங்குகிறது. ஏனென்றால் அதுதானே அந்த வளைவின் உச்சியில் இருக்கிறது.[5] பழைய முட்டுக்கற்கள் சில சமயம் உதிர்வதுண்டு இக்கல் உதிர்ந்தால் சீட்டுக்கட்டு மாளிகையைப் போல வளைவின் பிற கற்களும் அதிர்வினால் விழுந்துவிடும். இதை முட்டாள் வளைவு என அழைப்பர்.
அழகியலுக்கான ஒரு முதன்மைக் கருவியாக இக்கல்லை வளைவில் உள்ள மற்ற ஆப்புவடிவ கற்களைவிட பிரம்மாண்டமாக அமைப்பர். இக்கல்லில் சிற்ப உருவங்களும் அலங்கரிக்கப்பட்டுகிறது.
Remove ads
வரலாறு
கிரேக்கக் கட்டிடங்களில் சில வளைவுகளில் இதை வடிவமைத்ததுள்ளனர் என்றாலும், பண்டைய உரோமானியர்களே பூட்டும் கல்லை வளைவுகளில் முதலில் பொருத்தத் தொடங்கினார்கள்.
கட்டிடங்கள் மட்டுமல்ல பாலங்களும் உறுதியாக இருப்பதற்காக வளைவான வடிவத்தில் எழுப்பப்பட்டன. தங்களால் வடிவமைக்கப்பட்ட பாலங்களில் உரோமானியர்கள் பூட்டும் கற்களைப் பொருத்தினர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுப்பப்பட்ட இதுபோன்ற பாலங்கள் இன்றளவும் காணக்கிடைக்கின்றன.
இந்தியக் கட்டிடக்கலையில் சற்று தாமதமாக இதுபோன்ற வளைவான கட்டுமானங்கள் அறிமுகமாயின. பதினெட்டாம் நூற்றாண்டில் ராஜபுதன அரசர்களும், மராத்திய மன்னர்களும் இவற்றை அழகுபடுத்தினர். முதலில் கோட்டைக் கதவுகள் மற்றும் சாளரங்களுக்குதான் அவற்றைப் பயன்படுத்தினர். பின்னர் கோயில்கள் போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.[6]
Remove ads
படவரிசை
- மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கீஸ்டோனும் அதில் அமைக்கப்பட்டுள்ள பார்சிலோனாவின் சின்னமும்.
- தி யார்க் மின்ஸ்டர் சாப்டர் ஹவுசின் உச்சத்தில் உள்ள பூட்டும் கல்
- 14-ஆம் நூற்றாண்டின், மால்பர்க்கில் உள்ள செயின்ட் அன்னே தேவாலயத்தில் உள்ள பெரிய பூட்டும் கல்லில் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் முகம்.
- ஒரு அப்பாஸ் தேவாலயத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட பூட்டும் கல்
- எசுபானியாவின் கார்டோபா பள்ளிவாசலில் சம அளவு கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பூட்டும் கல்
- ஜேர்மன் தேவாலயத்தில் பூட்டும் கல்
- முனிச்சில் அலங்கரிக்கப்பட்ட பூட்டும் கல்லுடன் கதவுகள் மற்றும் சாளரங்கள்
- மான்துவா நகரியத்தில் ஒரு வீட்டில் பரந்த அளவில் அமைக்கப்பட்டுள்ள பூட்டும் கல்
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
