பூண்டி அருகர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூண்டி அருகர் கோயில் (Poondi Arugar Temple), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின், ஆரணி - ஆற்காடு நகரங்களுகிடையே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பூண்டி எனும் கிராமத்தில் அமைந்த சமணக் கோயில் ஆகும். பொன் எழில் நாதர் கோயில் என்று அழைக்கப்பட்ட இக்கோயிலை, பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் சோழர் கட்டிடக் கலையில் கட்டப்பட்டு, சமணத் தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
இக்கோயிலின் அடித்தளம் கருங்கற்களாலும், மேல் தளம் செங்கற்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் விமானம், தீர்த்தங்கரர்களின் சுதைச் சிற்பங்கள் கொண்டது. சம்புவரையர்களின் கல்வெட்டுகளின் படி, இக்கோயிலை வீர வீர ஜினாலயம் என அழைக்கப்பட்டது. .[1] தற்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயிலை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads