ஆற்காடு
இந்தியாவின் தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி. From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆற்காடு அல்லது ஆர்க்காடு (ஆங்கிலம்:Aarkadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டம் மற்றும் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும்.
Remove ads
பெயராய்வு
ஆர் என்றால் ஆத்தி, ஆத்தி மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாயிருந்ததால் ‘ஆர்க்காடு’ எனப்பட்டது.[2] ஆற்காடு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.9°N 79.33°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 164 மீட்டர் (538 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆற்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. ஆற்காடு மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பொருளாதாரம்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆற்காடு நகர, தொழிலாளர் பங்கு விகிதம் 25.50% ஆகும். ஆற்காடு வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால், முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய, வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக, இவ்வூர் மக்களுக்கு, பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழிலாளர்களில் சுமார் 85% பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10% தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில், ஆண்களின் பங்கு 50%; பெண்களின் பங்கு 20% ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும், வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு, ஆற்காடு மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஆற்காடு நகரைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை நகரத்தில், நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல் பொருட்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்தத் தோல் ஏற்றுமதியில், வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37% ஆகும்.
Remove ads
நிர்வாகம் மற்றும் அரசியல்
- ஆற்காடு நகரம், மூன்றாம் நிலை நகராட்சியாக 1959 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
- 1973 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும் மாற்றப்பட்டது.
- 1998 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. 30 வார்டுகளுக்கும், ஒவ்வோர் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- ஆற்காடு அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[5]
Remove ads
கல்வி
இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில், ஆற்காடு சுற்றியுள்ள கல்வி பங்கு, முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இங்கு ஓர் அரசுப் பல்கலைக்கழகம், ஒரு தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஓர் அரசு மருத்துவக்கல்லூரி, ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி தவிரப் பல பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
போக்குவரத்து
சாலை வசதிகள்
சுமார் 104.332 கி.மீ., அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை, வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது. இதில் 50.259 கி.மீ. (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கி.மீ. நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித் தார்ச்சாலைகள் உள்ளன. பெங்களூர் – சென்னை சாலையில் உள்ள கிருட்டிணகிரியையும், வாலாசாவையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 46, ஆற்காடு வழியாகச் செல்கிறது. மேலும் மாநில நெடுஞ்சாலை எண் 4
- ராணிப்பேட்டை – ஆரணி - விழுப்புரம் மற்றும்
- கடலூர் – திருவண்ணாமலை - சித்தூர்
சாலைகளை இணைத்துச் செல்கிறது.
சென்னையிலிருந்து, ஆரணிக்கு செல்ல வேண்டுமென்றால் ஆற்காடு வழியாக தான் செல்ல முடியும்.
தேசிய நெடுஞ்சாலை 46 - சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை 4 - இராணிப்பேட்டை - ஆற்காடு - ஆரணி - சேத்துப்பட்டு - செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை 5 - இராணிப்பேட்டை - செய்யாறு - வந்தவாசி - திண்டிவனம் நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை - இராணிப்பேட்டை - ஆற்காடு - காவனூர் - கண்ணமங்கலம் நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை - ஆற்காடு - வாலசாபேட்டை - சோளிங்கர் நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை - ஆற்காடு - இராணிப்பேட்டை - சித்தூர் நெடுஞ்சாலை
ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பேருந்து வசதிகள்
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன், ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கி.மீ. அருகிலுள்ள புறநகரங்களை, நகரப்பேருந்து சேவை, ஆற்காடு, வேலூருடனும் மற்றும் ஆரணியுடனும் இணைக்கிறது.
இரயில் வசதிகள்
ஆற்காடு நகரில் இரயில் சேவை ஏதுமில்லை. எனினும், ஆற்காடு நகரின் வழியாக இரயில்களை இணைக்கும் வகையில் திண்டிவனம் - ஆரணி - நகரி இரயில் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.[6]. அதுமட்டுமின்றி, சென்னை பெங்களூர் அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள காட்பாடி இரயில் நிலையம், சென்னை, பெங்களூர், திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சி இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள், இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன.
- விஜயவாடா, திருப்பதி, புவனேஸ்வர், நாக்பூர், பெங்களூரு, போபால், மும்பை, மங்களூர், திருச்சிராப்பள்ளி, பிலாஸ்பூர், கோர்பா, பாட்னா, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, சீரடி, கான்பூர், கயா, தன்பாத், ஜம்மு தாவி, மதுரை, பிலாய், குவாலியர், சென்னை சென்ட்ரல், ஹவுரா, புது தில்லி, கோயம்புத்தூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஜெய்ப்பூர்
மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன.
விமான சேவை
இங்கிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும், சுமார் 250 கி.மீ. தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 90 கி.மீ. தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads